கார்டிஃப்: நேற்றைய உலகக் கிண்ண ஆட்டத்தில் இலங்கை, ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதின.
ஆப்கானிஸ்தான் அணித் தலைவர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். 13 ஒவர்களில் 92 ஓட் டங்கள் என்ற அபாரத் தொடக் கத்தைக் கண்டது இலங்கை.
இந்நிலையில், 22வது ஓவரில் முகமது நபி ஒரே ஒவரில் 3 விக் கெட்டுகளைச் சாய்த்து இலங்கையை நிலைகுலையச் செய்தார்.
இந்த ஓவரின் 2வது, 4வது, 6வது பந்துகளில் திரிமானே, மெண்டிஸ், மேத்யூஸ் ஆகியோரை வெளியேற்றி, 1999 உலகக் கிண்ணத்திற்குப் பிறகு ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளைச் சாய்த்த பெருமையைப் பெற்றார் நபி.
1999ல் ஸிம்பாப்வேவுக்கு எதி ராகப் பாகிஸ்தானின் சக்லைன் முஷ்டாக் ஹாட்ரிக் இதே சாத னையைப் புரிந்தார்.

