லிவர்பூல்: ஒப்பந்தத்தை மேலும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்பதால் டேனியல் ஸ்டரிஜ், அல்பர்ட்டோ மொரேனோ ஆகிய இரு ஆட்டக் காரர்களும் வேறு குழுவை நாடிச் செல்லலாம் என லிவர்பூல் காற் பந்துக் குழு தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து தாக்குதல் ஆட் டக்காரரான டேனியல் ஸ்டரிஜ், 29, கடந்த 2013ஆம் ஆண்டில் செல்சி குழுவைவிட்டு விலகி லிவர்பூலுடன் இணைந்தார். அதன்பின் அக்குழுவிற்காக 160 போட்டிகளில் விளையாடி 60 கோல்களையும் அவர் அடித்தார்.
இருந்தாலும், கடந்த இரு பரு வங்களாக அடிக்கடி காயமடைந்து அவதிப்பட்டதால் குழுவில் அவ ருக்கு நிரந்தர இடம் கிடைக்க வில்லை.
ஸ்பானிய தற்காப்பு ஆட்டக் காரரான 26 வயது மொரேனோ, 2014ல் செவிய்யா குழுவிலிருந்து லிவர்பூலுக்குத் தாவினார். அவர் 141 போட்டிகளில ஆடி, மூன்று கோல்களையும் அடித்துள்ளார்.
இவ்விரு ஆட்டக்காரர்களும் திடலிலும் வெளியிலும் குழுவில் ஏற்படுத்திய தாக்கம் அளப்பரியது எனப் பாராட்டினார் லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப்.
"அண்மைய ஆண்டுகளில் லிவர்பூலின் சிறந்த வீரர்களுள் ஒருவர் என மெச்சத் தகுந்தவர் ஸ்டரிஜ். குழுவிற்காக எப்போதும் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் வழங்கத் தயாராக இருப்பவர் மொரேனோ," என கிளோப் புகழ்ந்தார்.

