சுடச் சுடச் செய்திகள்

சரிவிலிருந்து மீண்ட இலங்கை

கார்டிஃப்: அதிரடி, பின் விக்கெட் சரிவு, அதன்பின் மழையின் குறுக்கீடு என நிலைமை மாறிக்கொண்டே இருந்தபோதும் ஒருவழியாக ஆட்டத்தில் வென்று, நடப்பு உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது இலங்கை அணி.

நியூசிலாந்துக்கு எதிரான தனது முதல் ஆட்டத்தில் வெறும் 136 ஓட்டங்களை மட்டுமே எடுத்து, பத்து விக்கெட் வித்தி யாசத்தில் படுதோல்வி கண்டதால் ஆப்கா னிஸ்தானுக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இலங்கை அணி மீண் டெழ வேண்டிய நெருக்கடியில் இருந்தது.

இந்த நிலையில், தொடக்க வீரர்களான அணித் தலைவர் கருணரத்னேவும் குஷல் பெரேராவும் அதிரடியாக ஆடியதால் இலங்கை அணி இமாலய இலக்கை நிர்ண யிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவ்வணியின் மத்தியத் திடல் ஆட்டக் காரர்கள் நிலைத்து ஆடத் தவறியதால் ஒரு கட்டத்தில் அவ்வணி இருநூறைத் தொடுமா என்பதே கேள்விக்குறியாகிப் போனது.

அந்த அணி எட்டு விக்கெட் இழப்பிற்கு 182 ஓட்டங்களை எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் 41 ஓவர் களாகக் குறைக்கப்பட்டது. மழை நின்றபின் பந்தடிப்பைத் தொடர்ந்த இலங்கை அணி 201 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

‘டக்வொர்த் லூவிஸ்’ முறைப்படி ஆப்கானிஸ்தான் அணி 41 ஓவர்களில் 187 ஓட்டங்களை எடுத்தால் வெற்றி என இலக்கு மாற்றியமைக்கப்பட்டது.

எளிய இலக்கு என்றாலும் ஆப்கானிஸ் தான் அணியினரால் இலங்கை வீரர்களின் பந்துவீச்சைச் சமாளிக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 57 ஓட்டங்களை எடுத்து அந்த அணி தத்தளித்தது.

இறுதியில் 32.4 ஓவர்களில் 152 ஓட்டங் களை மட்டும் எடுத்த அவ்வணி, 34 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. 

இலங்கை அணித் தரப்பில் மலிங்கா மூன்று விக்கெட்டுகளைச் சாய்த்தார். நான்கு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய நுவான் பிரதீப் ஆட்ட நாயகனாகத் தேர்வு பெற்றார். அடுத்த ஆட்டங்களில் ஆப்கா னிஸ்தான், நியூசிலாந்தையும் இலங்கை, பங்ளாதேஷையும் எதிர்கொள்கின்றன.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon