ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ்: பந்துவீச்சில் மிரட்டுவோம்

நாட்டிங்ஹம்: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கவுள்ள முக்கியமான ஆட்டத் தில் இருமுறை வெற்றியாளரான வெஸ்ட் இண்டீசும் ஐந்து முறை வெற்றியாளரான ஆஸ்திரேலியா வும் பலப்பரிட்சை நடத்தவுள்ளன.

இவ்விரு அணிகளும் தத்தமது முதல் ஆட்டங்களில் வெற்றியை ருசித்தன. ஒரு காலத்தில் அபாய கரமான வேகப் பந்துவீச்சு வரிசை யைக் கொண்டிருந்த வெஸ்ட் இண்டீஸ், பின்னர் அதில் மெல்ல மெல்ல பலவீனமடைந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானை வெறும் 105 ஓட்டங்களில் வெஸ்ட் இண்டீஸ் வேகப் பந்துவீச்சாளர்கள் சுருட்டியது பழைய நினைவுகளை மலரச் செய்வதாக இருந்தது.

இன்றைய போட்டியில் ‘ஷார்ட் பிட்ச்’ பந்துகளை வீசி ஆஸ்தி ரேலிய அணியின் தொடக்கப் பந்தடிப்பாளர்களை மிரட்டுவோம் என வெஸ்ட் இண்டீஸ் ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரசல் எச்சரித் துள்ளார். அதற்கு, ஓவருக்கு இரு ‘பவுன்சர்’ பந்துகளை வீசுவோம் என்று ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் நேதன் கூல்ட்டர் நைல் பதிலடி கொடுத்துள்ளார்.

அதே நேரத்தில், இரு அணி களின் பந்தடிப்பாளர்களும் நல்ல ஆட்டத்திறனுடன் உள்ளனர்.

ஓராண்டு தடைக்குப் பிறகு அணிக்குத் திரும்பியபோதும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நிலைத்து ஆடி, இறுதி வரை களத்தில் நின்று 89 ஓட்டங் களை எடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி தேடித் தந்தார் டேவிட் வார்னர். அதேபோல, பாகிஸ்தான் அணிக்கெதிராக 33 பந்துகளில் அரை சதம் விளாசி, 40 வயதை நெருங்கினாலும் தமது அதிரடி ஆட்டத்திறனை இழக்க வில்லை என நிரூபித்தார் வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல்.

இப்படி, இரு அணிகளும் சமபலத்துடன் காணப்பட்டாலும் இன்றைய நாளில் மழையும் அவற் றுக்குப் பெரும் சவாலாக இருக்க லாம். ஏனெனில், நாள் முழுவதும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக முன்னுரைக்கப்பட்டுள்ளது.

போட்டி நடைபெறும் டிரென்ட் பிரிட்ஜ் திடல் ஓட்டக் குவிப்பிற்குப் பெயர்போனது என்பதால் நிஜ மழையுடன் ஓட்ட மழையையும் ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!