இடித்துக்கொண்ட ஹாக்கி வீராங்கனைகள்; சிங்கப்பூர் வீராங்கனைக்குப் பக்கவாதம்

இடித்துக்கொண்ட ஹாக்கி வீராங்கனைகள்; சிங்கப்பூர் வீராங்கனைக்குப் பக்கவாதம்

1 mins read
419df76c-7e99-49de-bd98-2461ab31588f
கடுமையாக இடித்துக்கொண்டதால் தலையில் பலத்த அடிபட்டு கீழே விழுந்த சித்தி நூர் ரைஹ்னா. படம்: ஸைரீனா ஜைநுதீன் -

சிங்கப்பூர்: ஹாக்கி போட்டியின் போது சக வீராங்கனை மேல் இடித்ததால், சிங்கப்பூர் ஹாக்கி வீராங்கனை பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.

வேன்குவிஸர்ஸ் ஹாக்கி குழு விற்காக விளையாடி வருபவர் 24 வயது சித்தி நூர் ரைஹ்னா.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த தேசிய ஹாக்கி லீக் ஆட்டத் தில் வேன்குவிஷர்ஸ் அணியும் கிரசெண்ட் ஹாக்கி குழுவும் மோதின.

செங்காங் ஹாக்கி அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தின் போது, எதிரணி வீராங்கனை மீது எதிர் பாராமல் மோதியதால் ரைஹ்னா விற்குத் தலையில் காயம் ஏற்பட் டது.

இதனையடுத்து செங்காங் பொது மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால், உடனடி மருத்துவ உதவி அளிக்கும் வகையில் அந்த விளையாட்டரங்கில் உதவியாளர் யாரும் இல்லாமல் போனது பெரும் கவலையை கிளப்பியுள்ளது.

பலமாக மோதியதால் தலையில் ஏற்பட்ட காயம் காரணமாக, தான் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள தாக மருத்துவர்கள் கூறியதாக ரைஹ்னா சொன்னார். தலைசுற்றல் காரணமாக தனிச்சையாக நடக்க முடியாத அவர், எப்போது வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் கூறவில்லை.