லண்டன்: பங்ளாதேஷுக்கு எதி ரான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தப்பிப் பிழைத்த நியூசிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பங்ளாதேஷை முதலில் பந் தடிக்கச் செய்தார் பூவா தலையா வென்ற நியூசிலாந்து அணித் தலைவர்.
அந்த அணிக்கு சௌமியா சர்கார், தமிம் இக்பால் இணை ஓரளவு நல்ல துவக்கம் தந்து ஆட்டமிழந்தது.
அடுத்து வந்த சாகிப் அல் ஹசன், ஜேம்ஸ் நீஷம் வீசிய 23வது ஓவரில் 'ஹாட்ரிக்' பவுண் டரி விளாசினார்.
பொறுப்பாக ஆடிய சாகிப் (64), அரைசதத்தைக் கடந்தார். ஆனால் அடுத்தடுத்து வந்த வீரர்கள் 20 ஓட்டங்களுக்கும் குறைவாக எடுத்து ஆட்டமிழந்தனர்.
இதனால் பங்ளாதேஷ் அணி 49.2 ஓவரில் 244 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
பங்ளாதேஷுக்கு எதிராக 27வது ஓவரை வீசிய நியூசிலாந் தின் ஃபெர்குசன், 'ஹாட்ரிக் வைடு' வீசினார்.
எட்டக்கூடிய இலக்கை விரட் டிய நியூசிலாந்திற்கு அதன் தலை வர் வில்லியம்சன், ராஸ் டெய்லர் இணை எதிரணியின் பந்துவீச்சை சமாளித்து ஓட்டங்களைச் சேர்த் தது.
வில்லியம்சன் 40 ஓட்டங்க ளுக்கு ஆட்டமிழக்க, டாம் லாதம் ஓட்டம் எதுவும் எடுக்காமல் வெளியேறினார்.
தொடர்ந்து வந்தவர்களும் நிலைக்காத நிலையில் எட்டு விக் கெட்டுகளை இழந்த நியூசிலாந்து அணி, வெற்றிக்காக போராட வேண்டிய நெருக்கடியில் இருந் தது.
இறுதியில் முஸ்தபிசுர் பந்தை, சான்ட்னர் பவுண்டரிக்கு அனுப்ப, நியூசிலாந்து அணி 47.1 ஓவரில், 8 விக்கெட்டுக்கு 248 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
82 ஓட்டங்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதை வென்றார் ராஸ் டெய்லர்.

