ரோகித்: பந்தடிக்க கடினமாக இருந்தது

சௌத்ஹேம்டன்: இந்திய கிரிக் கெட் வீரர்களின் பந்துவீச்சு புயலி லும் ரோகித் சர்மாவின் ஓட்ட மழையிலும் சிக்கி சின்னாபின்ன மானது தென்னாப்பிரிக்கா.

நேற்று முன் தினம் நடந்த உலகக் கிண்ண கிரிக்கெட் போட் டியில் இலக்கை விரட்டிய இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி யது.

பூவா தலையாவில் வென்று பந் தடிப்பைத் தொடங்கிய தென்னாப் பிரிக்கா அணிக்குத் துவக்கத் திலேயே அதிர்ச்சி அளித்தார் உலகக்°கிண்ண அறிமுக வீரர் பும்ரா.

முதலில் ஆம்லாவை (6) ஆட் டம் இழக்க வைத்த பும்ரா, அடுத்த சில பந்துகளில் குவின்டன் டி காக்கையும் (10) வெளியேற்றினார்.

அதன்பிறகு அணியை மீட்க முயன்ற டூ பிளசிஸ், வான் டெர் துசென் இருவரும் 20வது ஓவரில் யசுவேந்திர சகலின் சுழலில் சிக்கினர்.

சகலைத் தொடர்ந்து மில்லர், பெலுக்வாயோ என மேலும் இரண்டு விக்கெட்டை வீழ்த்தினார்.

இந்நிலையில் மோரிஸ், ரபாடா வின் போராடத்தால் தென்னாப் பிரிக்கா 200 ஓட்டங்களைக் கடந்தது.

ஆனால், புவனேஷ்வர் தனது பங்குக்கு கிறிஸ் மோரிஸ், இம் ரான் தாகிர் விக்கெட்டைக் கைப் பற்ற, தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 227 ஓட்டங்கள் எடுத்தது.

அதைத்தொடர்ந்து எளிய இலக்கைத் துரத்திய இந்திய அணி தொடக்க வீரர்கள் தவான், அணித் தலைவர் கோஹ்லி சொற்ப ஓட்டங்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றமளித்தனர்.

இந்நிலையில் பொறுப்புடன் ஆடிய ரோகித் சர்மாவால் இந்திய அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது.

இதற்கிடையே லோகேஷ் ராகு லும் மகேந்திர சிங் டோனியும் ஆட்டமிழந்தனர்.

பலமுறை தப்பிப் பிழைத்த ரோகித் சர்மா, ஒருநாள் போட்டியில் 23வது சதம் அடித்தார்.

இதனால் இந்திய அணி 47.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 230 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.

தொடர் தோல்வியால் தடு மாறும் தென்னாப்பிரிக்கா, மீத முள்ள 6 போட்டிகளில் குறைந்தது 5ல் வென்றால் மட்டுமே அரை யிறுதிக்குள் நுழைய முடியும்.

வெற்றிக்குப் பிறகு பேசிய இந் திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, “எங்களைப் பொறுத்த வரை வெற்றியுடன் போட்டித் தொடரைத் தொடங்கியிருப்பது முக்கியமானது.

“நாங்கள் ஓட்ட விகிதத்தில் அதிக வித்தியாசம் பெறாமல் இருக்கலாம். ஆனால் இந்த ஆட்டத்தில் ஆடுகளம் எவ்வாறு பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காது என்பதைப் பார்க்கவேண்டும். இது கடும் சவாலாக இருந்தது.

“ரோகித் சர்மா ஆட்டம் அற் புதமாக இருந்தது. அவரது சிறந்த ஒருநாள் போட்டி இன்னிங்ஸ் இது வாகும். பந்து வீசியபோது ஒரு குழுவாக நாங்கள் நம்பிக்கையுடன் இருந்தோம்.

“தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சு நன்றாக இருந்த தால் பந்தடிப்பில் நாங்கள் கடின மாக உழைக்க வேண்டியது இருந் தது. ஆனால் ரோகித் சர்மா ஆட்டம் மிக மிக சிறப்பானது. அவருடன் லோகேஷ் ராகுல் இணைந்து நன்றாக பந்தடித்தார்.

“பும்ராவின் பந்துவீச்சை பந் தடிப்பாளர்கள் கணிக்க முடியாமல் திணறுகிறார்கள். அவர் கடும் நெருக்கடி கொடுத்துத் தவறு செய்ய வைத்து விக்கெட்டை வீழ்த்துகிறார்.

“சகல் அருமையாகப் பந்துவீசி விக்கெட்டுகளைக் கைப் பற்றி கொடுத்தார்,” என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!