ஹோல்டர்: பொறுப்பற்ற வகையில் பந்தடித்தோம்

நாட்டிங்காம்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீசை 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா நேற்று முன்தினம் தோற்கடித்தது.

முதலில் பந்தடித்த ஆஸ்தி ரேலியா 79 ஒட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதன்பின் ஸ்மித் = அலெக்ஸ் கேரி ஜோடி சிறப்பாக விளை யாடியது.

கேரி 45 ஓட்டங்களிலும் ஸ்மித் 73 ஓட்டங்களிலும் ஆட்டமிழந் தனர். 8வது வீரராகக் களம் இறங்கிய நாதன் கவுல்டர் நைல் அதிரடியாக விளையாடினார்.

அவர் 60 பந்துகளில் 92 ஓட்டங்கள் எடுத்தார். இதில் 8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் அடங்கும்.

ஆஸ்திரேலியா 49 ஓவர்களில் 288 ஒட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

வெற்றி இலக்கை நோக்கி வெஸ்ட் இண்டீஸ் அணி பந்தடிக்கத் தொடங்கியது.

அந்த அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 273 ஓட்டங்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால் 15 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியத் தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டு களைக் கைப்பற்றினார்.

இந்த உலகக் கிண்ணப் போட்டியில் ஆஸ்திரேலியா இதுவரை களமிறங்கியுள்ள இரண்டு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் முதல் தோல்வியைச் சந்தித்துள்ளது.

தோல்வி குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் ஏமாற்றம் தெரிவித்தார்.

“இந்தத் தோல்வி உண்மை யிலேயே ஏமாற்றம் அளிக்கிறது. போட்டியில் நாங்கள் நல்ல நிலையில்தான் இருந்தோம் என்று நினைத்தேன். அனேகமாக நாங்கள் சிறிது உத்வேகத்தைக் காட்ட வேண்டிய நேரத்தில் பொறுப்பற்ற வகையில் பந்தடித்து ஆட்டமிழந்துவிட்டோம்.

ஆனாலும் இப்போட்டியில் இருந்து நிறைய நேர்மறை வி‌ஷயங்களை எடுத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். நாதன் கவுல்டர் நைல் 60 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது அவரது கேட்சைத் தவறவிட்டோம்.

“அதன்பின் அவர் மேலும் 30 ஓட்டங்கள் சேர்த்தார். இதுதான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது பந்தடிப்பாளர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து விளை யாட வேண்டியது அவசியம். இன்னும் போட்டிகள் இருக் கின்றன. நாங்கள் இன்னும் நிலையான ஆட்டத்தை வெளிப் படுத்த வேண்டும்,” என்று ஹோல்டர் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!