இறுதி ஆட்டத்தில் மோதும் தாய்லாந்து, சிங்கப்பூர்

இறுதி ஆட்டத்தில் மோதும் தாய்லாந்து, சிங்கப்பூர்

1 mins read

மெர்லயன் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு சிங்கப்பூரும் தாய்லாந்தும் தகுதி பெற்றுள்ளன.

இவ்வாண்டின் மெர்லயன் கிண்ணப் போட்டியின் அரை இறுதி ஆட்டங்கள் நேற்று நடைபெற்றன.

முதல் அரையிறுதி ஆட்டத் தில் 23 வயதுக்குட்பட்டோருக் கான தாய்லாந்தும் இந்தோனீசி யாவும் பொருதின.

மற்றோர் அரையிறுதி ஆட்டத் தில் 23 வயதுக்குட்பட்டோருக் கான சிங்கப்பூர் குழுவும் பிலிப்பீன்ஸ் குழுவும் மோதின.

முதல் அரையிறுதி ஆட்டத்தில் இந்தோனீசியாவை 2=1 எனும் கோல் கணக்கில் தாய்லாந்து தோற்கடித்தது.

முற்பாதி ஆட்டத்தில் தாய் லாந்து குழு போட்ட இரு கோல்கள் அக்குழுவுக்கு வெற்றி யைத் தேடித் தந்தது.

பிலிப்பீன்ஸ் குழுவுக்கு எதிரான ஆட்டத்தில் சிங்கப்பூர் 3=0 எனும் கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் 26வது நிமிடத்தில் அமிருல்தீன் அஸ் ரஃப் சிங்கப்பூரின் முதல் கோலைப் போட்டார்.

பிறகு 62வது நிமிடத்தில் இர்ஃபான் ஃபாண்டியும் 67வது நிமிடத்தில் இக்ஷான் ஃபாண்டி யும் சிங்கப்பூரின் இரண்டாவது, மூன்றாவது கோல்களைப் போட்டு பிலிப்பீன்ஸைப் புரட்டி எடுத்தனர். நாளை இறுதி ஆட்டம் நடைபெறும்.