இங்கிலாந்தின் தற்காப்பில் குளறுபடி: வெற்றியைப் பறித்த ஹாலந்து

இங்கிலாந்தின் தற்காப்பில் குளறுபடி: வெற்றியைப் பறித்த ஹாலந்து

2 mins read
2f1fc45b-4ff5-4637-84df-1cbc2aa8618f
சொந்த கோல் போடும் இங்கிலாந்தின் கைல் வாக்கர் (நடுவில்). இந்த கோல் ஹாலந்தை முன்னிலைக்குக் கொண்டு சென்றது. படம்: இபிஏ -

குயூமாரேஸ்: நேஷன்ஸ் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஹாலந்து தகுதி பெற்றுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் இங்கி லாந்தை 3=1 எனும் கோல் கணக்கில் அது தோற்கடித்தது.

ஆட்டத்தின் 32வது நிமிடத்தில் இங்கிலாந்துக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது.

பெனால்டியை எடுத்த ரேஷ்ஃபர்ட் கோல் போட்டு இங்கிலாந்தை முன்னிலைக்குக் கொண்டு சென்றார்.

இடைவேளையின்போது இங்கி லாந்து 1=0 எனும் கோல் கணக்கில் முன்னிலை வகித்தது.

பிற்பாதி ஆட்டத்தில் இரு குழுக்களும் கோல் வேட்டையில் இறங்கின.

கிடைத்த சில நல்ல வாய்ப்பு களை இங்கிலாந்து கோட்டை விட்டது.

இதுவும் அதன் தோல்விக்குப் பிறகு காரணமாக இருந்தது.

ஆட்டத்தின் 73வது நிமிடத்தில் ஹாலந்து கோல் போட்டு ஆட்டத்தை சமன் செய்தது.

டிலைட் தலையால் முட்டிய பந்து வலையைத் தொட்டது. அதனைத் தொடர்ந்து, இரு குழுக்களும் கோல் ஏதும் போடாததால் ஆட்டம் சமநிலையில் முடிந்தது. எனவே, வெற்றியாளரை நிர்ணயிக்க கூடுதல் நேரம் விளை யாடப்பட்டது.

கூடுதல் நேரத்தில்தான் இங்கி லாந்துக்குக் கெட்ட காலம் தொடங்கியது.

ஆட்டத்தின் 97வது நிமிடத்தில் சக வீரர் ஜான் ஸ்டோன்ஸ் செய்த பிழையைச் சரிசெய்ய விரைந்த இங்கிலாந்து தற்காப்பு ஆட்டக் காரர் கைல் வாக்கர் தவறுதலாகப் பந்தைத் தமது சொந்த வலைக்குள் அனுப்பினார்.

அத்துடன் இங்கிலாந்துக்கு ஏற்பட்ட சோதனை நின்றுவிட வில்லை. ஆட்டத்தின் 114வது நிமிடத்தில் தம்மிடம் இருந்த பந்தை எதிரணியிடம் பறி கொடுத்தார் இங்கிலாந்து வீரர் ரோஸ் பார்க்லி.