இன்று இந்தியா-ஆஸ்திரேலியா மோதல்: ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை

லண்டன்: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருகிறது. லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று இந்தியா = ஆஸ்திரேலியா அணிகள் மோது கின்றன.

முதல் சுற்றில் ஒவ்வோர் அணியும், மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும்.

அதன்படி ஒவ்வோர் அணியும் ஒன்பது ஆட்டங்களில் களமிறங்க வேண்டும்.

முதல் சுற்று முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குத் தகுதிபெறும்.

விராத் கோஹ்லி தலைமை யிலான இந்திய அணி உலகக் கிண்ண போட்டியில் வெற்றியுடன் கணக்கைத் தொடங்கியது.

இந்திய அணி அதன் முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக் காவை 6 விக்கெட் வித்தியா சத்தில் வீழ்த்தியது.

இரண்டாவது ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவை அது சந்திக்கிறது.

தென்னாப்பிரிக்காவை தோற் கடித்தது போல் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இரண்டாவது வெற்றியைப் பெறுமா என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக் கின்றனர்.

இந்திய அணி தொடர்ந்து வெற்றிகளைப் பதிவு செய்து புள்ளிகளைக் குவிக்கும் முனைப் பில் உள்ளது. அதே நேரத்தில் ஆஸ்திரேலியா இந்தத் தொடரில் சிறப்பாக விளையாடி வருவதால் அதை முறியடிப்பது சவால்மிக்க காரியமாக இருக்கும்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதி ரான ஆட்டத்தில் பந்துவீச்சு முக்கிய பங்கு வகித்தது. சுழற்பந்து வீரர் யுஸ்வேந்திர சகலும் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவும் நேர்த்தியாகப் பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

அதேபோல புவனேஸ்வர் குமாரும் குல்தீப் யாதவும் நல்ல நிலையில் உள்ளனர்.

ரோகித் சர்மா சதம் அடித்து சிறப்பான இன்னிங்சை வெளிப் படுத்தினார். அதிரடி பந்தடிப் பாளராக அவர் மீதான எதிர்பார்ப்பு இன்றைய ஆட்டத்திலும் இருக் கிறது.

டோனி, ஹார்திக் பாண்டியா ஆகியோரும் திறமையான ஆட்டத் தை வெளிப்படுத்தி வருகின்றனர். விராத் கோஹ்லி, லோகேஷ் ராகுல், தவான், கேதார் ஜாதவ் போன்ற பந்தடிப்பாளர்களும் முத்திரை பதிக்கக் கூடியவர்கள்.

இன்றைய ஆட்டத்துக்கான இந்திய அணியில் மாற்றம் எதுவும் இருக்காது என்றே எதிர்பார்க்கப் படுகிறது. ஒருவேளை ஆடுகளத் தன்மையைப் பொறுத்து மாற்றம் செய்யப்படலாம்.

ஆஸ்திரேலிய அணி தான் களமிறங்கிய இரண்டு ஆட்டங் களிலும் வென்று மிகவும் மற்ற அணிகளுக்கு ஓர் அச்சுறுத் தலாக இருக்கிறது.

தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் இரண்டாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸை 15 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த் தியது.

இந்தியாவை வீழ்த்தி அந்த அணி ‘ஹாட்ரிக்’ வெற்றி பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.

பந்தடிப்பு மற்றும் பந்துவீச்சில் ஆஸ்திரேலிய அணி சம பலத் துடன் திகழ்கிறது.

பந்தடிப்பில் அணித் தலைவர் ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித் ஆகியோரும் பந்துவீச்சில் ஸ்டார்க், கம்மின்ஸ், ஆடம் ஸாம்பா ஆகியோரும் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகப் பந்துவீச்சாளரான நேதன் கூல்ட்டர் நைல் அதிரடி யான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

லண்டனில் நேற்று பெய்த மழையால் இந்திய வீரர்களின் பயிற்சி பாதிக்கப்பட்டது.

இந்த வாரயிறுதி வரை மழை வாய்ப்பு இருப்பதால் இன்றைய ஆட்டம் பாதிக்கப் படுமா என்ற அச்சமும் இருக் கிறது.

பாகிஸ்தான் = இலங்கை அணிகள் கார்டிஃப் மைதானத் தில் நேற்று முன்தினம் மோத இருந்த ஆட்டத்தில் ஒரு பந்து கூட வீசப்படவில்லை. மழை யால் ஆட்டம் ரத்து செய்யப் பட்டது.

இந்திய அணி கடைசியாக ஆஸ்திரேலியாவிடம் மோதிய ஆட்டத்தில் 35 ஓட்டங்களில் தோற்று இருந்தது.

இதனால் ஆஸ்திரேலியாவை வீழ்த்த இந்திய வீரர்கள் அனைவரும் முழுத் திறமையைப் பயன்படுத்த வேண்டும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதற்கிடையே, இந்திய வேகப்பந்து வீச்சாளர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என ஆஸ்திரேலியா வீரர் களுக்கு அந்த அணியின் துணைப் பயிற்றுவிப்பாளரும் முன்னாள் அணித் தலைவரு மான ரிக்கி பாண்டிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அதிவேக பவுன்சர் பந்துகளால் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரர்கள் வீழ்ந்தனர்.

“அதேபோன்ற உத்தியை ஓவலில் நடைபெற உள்ள போட்டியின்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச் சாளர்களான ஜஸ்ப்ரித் பும்ரா, புவனேஸ்வர் குமார், முகம்மது ஷமி பயன்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. எனவே ஆஸ்திரேலிய வீரர்கள் கவன மாக விளையாட வேண்டும்,” என்று பாண்டிங் தெரி வித்துள்ளார்.

ரிக்கி பாண்டிங். படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!