வில்லியம்சன் அதிரடியில் நியூசிலாந்து வெற்றி

டான்டன்: இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது.

டான்டன் நகரில் நேற்று நடைபெற்ற 13வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து ஆப்கானிஸ்தான் முதலில் பந்தடித் தது.

ஆப்கானிஸ்தான் அணி முதல் விக்கெட்டுக்கு 66 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான ஹஸ்ர தல்லாஹ் ஜஜாய் 34 ஓட்டங் களிலும் நூர் அலி ஸத்ரான் 31 ஓட்டங்களிலும் விக்கெட்டுகளை இழந்தனர்.

அடுத்து களமிறங்கிய பந்தடிப் பாளர்களும் நியூசிலாந்தின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். இருப்பினும் மறுமுனையில் சிறப்பாக ஆடிய நூர் அலி ஸத்ரான் அரை சதம் அடித்தார்.

ஆட்டத்தில் 41.1 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 172 ஓட்டங்கள் சேர்த்தது. அதிகபட்சமாக நூர் அலி ஸத்ரான் 59 ஓட்டங்கள் குவித்தார்.

நியூசிலாந்து அணி சார்பில் ஜேம்ஸ் நீஷம் ஐந்து விக்கெட்டு களையும் பெர்குசன் மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

இதையடுத்து 173 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக் குடன் நியூசிலாந்து அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக் காரர்களாக மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் ஓவர், முதல் பந்தில் அப்டாப் ஆலம் வீசிய பந்து வீச்சில் மார்ட்டின் கப்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன் களம் இறங்கி தனக்கான சிறப்பான பாணியில் ஓட்டங்களை குவிக்கத் தொடங் கினார். இதனிடையே ஆட்டத்தின் 7.5வது ஓவரில் காலின் முன்ரோ 22 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் ‘கேட்ச்’ கொடுத்து ஆட்டமிழந்தார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு பிறகு இணைந்த கேன் வில்லி யம்சன் மற்றும் ராஸ் டெய்லர் இருவரும் இணைந்து ஓட்டங் களை குவித்தனர்.

ஆட்டத்தின் 25.4வது ஓவரில் ஆலம் வீசிய பந்தில் ராஸ் டெய்லர் 52 பந்துகளை எதிர்கொண்டு 48 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் வெளியேறினார். இறுதியில், ஆட்டத்தில் 32.1 ஓவர்கள் மட்டும் நிறைவடைந்திருந்த நிலையில் 173 ஓட்டங்கள் எடுத்து நியூ சிலாந்து அணி ஏழு விக்கெட் வித்தியாத்தில் மகத்தான வெற்றி பெற்றது.

நியூசிலாந்து அணி சார்பாக வில்லியம்சன் கடைசி வரை களத்தில் பொறுப்புடன் விளையாடி 79 ஓட்டங்கள் எடுத்தார்.

நியூசிலாந்து அணி தான் விளையாடிய இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. மாறாக, ஆப்கானிஸ்தான் அணி விளையாடிய இரு போட்டிகளிலும் தோல்வியடைந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!