சர்ச்சையைக் கிளப்பிய ஹேமில்டனின் வெற்றி

சர்ச்சையைக் கிளப்பிய ஹேமில்டனின் வெற்றி

1 mins read
163587bf-ae0d-4d21-960a-42bf13ce1b3d
ஹேமில்டனின் இந்த வெற்றி வெட்டலுக்கு ஏமாற்றத்தை அளித்ததோடு ரசிகர்களிடையே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தாலும் ஆட்டம் முடிந்து விருது மேடையில் வெட்டலுக்கு ஆறுதல் கூறி அவரை அரவணைத்தார் ஹேமில்டன். படம்: ஏஎஃப்பி -

மான்ட்ரீல்: கனடிய 'எஃப்1 கிராண்ட் பிரி' கார் பந்தயத்தில் பிரிட்டிஷ் வீரர் லூவிஸ் ஹேமில்டன் (வலது) வெற்றியாளர் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளனர்.

நடப்புப் பருவத்தில் ஏழாவது பந்தயம் கனடாவின் மான்ட்ரீல் நகரில் நேற்று நடைபெற்றது.

தகுதிச் சுற்றுப் போட்டியில் வெற்றி பெற்ற ஃபெராரி அணியின் செபாஸ்டியன் வெட்டல் நேற்றைய போட்டியிலும் தொடக்கத்திலிருந்து முதலிடம் வகித்தார். ஆனால், தடம் மாறியும் பாதுகாப்பற்ற முறையில் காரை இயக்கியதற் காகவும் அவருக்கு ஐந்து வினா டிகள் அபராதமாக விதிக்கப்பட்டது.

இதையடுத்து, அவருக்கு அடுத்தபடியாக வந்த மெர்சிடிஸ் அணியின் ஹேமில்டன் வெற்றி யாளராக அறிவிக்கப்பட்டார். நடப்பு பருவத்தில் ஐந்து பந்தயங் களில் அவர் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்த பந்தயம் இன்னும் இரு வாரங்களில் பிரான்சில் நடைபெறவுள்ள நிலையில், இந்த வெற்றி ஹேமில் டனுக்கு உந்துதலாக அமைகிறது.