சுடச் சுடச் செய்திகள்

டென்னிஸ்: பிரெஞ்சு ஓபன் விருதை 12வது முறையாக வென்று ரஃபேல் நடால் சாதனை

பாரிஸ்: ‘பிரெஞ்சு ஓப்பன்’ டென்னிஸ் போட்டியில் ஸ்பானிய வீரர் ரஃபாயல் நடால் 12வது முறையாகப் பட்டத்தை வசப் படுத்தி சாதனை படைத்துள்ளார்.

‘கிராண்ட் ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓப்பன் டென்னிஸ் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடந்து வந்தது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று முன்தினம் அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் நடப்பு வெற்றி யாளரும் உலகத் தரவரிசையில் இரண்டாம் நிலை வீரருமான நடாலும் நான்காவது நிலை ஆஸ்திரிய வீரர் டொமினிக் தியம்மும் பலப்பரீட்சை நடத்தினர். களிமண் தரை போட்டிகளில் நானே ராஜா என்பதை நடால் மீண்டும் ஒருமுறை நிரூபித்துக் காட்டியுள்ளார்.

டொமினிக் தியம்மால் நடா லுக்குச் சவால் கொடுக்க முடிந் ததே தவிர அவரது ஆதிக்கத்தைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. சரியாக மூன்று மணி நேரம் நீடித்த விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் நடால் 6-3, 5-7, 6-1, 6-1 என்ற செட் கணக்கில் டொமினிக் தியம்மை வீழ்த்தி பட்டத்தை கைப்பற்றினார்.

டொமினிக் தியம் கடந்த ஆண்டும் இதே நடாலிடம்தான் இறுதி ஆட்டத்தில் தோற்றார். இந்தத் தடவையும் அவரது ‘கிராண்ட் ஸ்லாம்’ கனவை நடால் சிதைத்துவிட்டார்.

வெற்றிக்குப் பிறகு நடால் கூறுகையில், “முதலில் டொமினிக் தியம்முக்கு வாழ்த்துச் சொல்ல விரும்புகிறேன். அவருக்காக நான் வருந்துகிறேன். ஏனெனில் அவர் இங்கு பட்டத்துடன் நிற்ப தற்குத் தகுதியானவர். அவர் கடின உழைப்பாளி. எதிர்காலத்தில் நிச்சயம் இந்தக் கிண்ணத்தை வெல்வார் என்று நம்புகிறேன்.

“மீண்டும் ஒருமுறை பட்டம் வென்றதை நம்ப முடியவில்லை. எனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகள் இல்லை. 2005ல் இங்கு முதல்முறையாக விளையா டியபோது அது எனது கனவாக இருந்தது. ஆனால் இப்போது வரை தொடர்ந்து விளையாடுவேன் என்று ஒருபோதும் நினைத்த தில்லை. இது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம்,” என்றார்.

 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon