‌ஷிகர் தவான், விராத் கோஹ்லி அசத்தல்

லண்டன்: உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய, ஆஸ்திரேலிய அணிகள் மோதிய லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. முதலில் பந்தடித்த இந்தியா ஐந்து விக்கெட் இழப் பிற்கு 352 ஓட்டங்களைக் குவித் தது. பின்னர் 353 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களம் இறங்கிய ஆஸ்திரேலியா 316 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 36 ஓட்ட வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

இந்த முக்கிய வெற்றியின் மூலம் ஆஸ்திரேலியாவின் பல்வேறு தொடர் சாதனைகளுக்கு ஒட்டுமொத்தமாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது இந்தியா.

1999ஆம் ஆண்டு உலகக் கிண்ணப் போட்டியில் ஆஸ்திரே லியா இலக்கை நோக்கி விரட்டிய போது பாகிஸ்தானுக்கு எதிராகத் தோல்வியைச் சந்தித்திருந்தது.

அதன்பின் தொடர்ச்சியாக 19 முதல் சுற்று ஆட்டங்களில் அது வெற்றி பெற்றிருந்தது. அதற்கு தற்போது இந்தியா முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 2011ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டியின்போது ஆஸ்திரேலியாவை இந்தியா வீழ்த்தியிருந்தது. இப்போது இந்திய அணிக்கு மீண்டும் வெற்றி கிடைத்துள்ளது. ஒட்டுமொத்தமாக உலகக் கிண்ண வரலாற்றில் இந்த வெற்றியோடு நான்கு முறை ஆஸ்தி ரேலியாவை இந்தியா சாய்த்துள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக உலகக் கிண்ணத் தொடரில் எதிரணி வீரர்கள் சதம்கண்ட கடைசி ஐந்து போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வாகை சூடி சதத்தைப் பயனற்றதாக்கி உள்ளது. அதை இந்த ஆட்டத்தில் சதமடித்த ‌ஷிகர் தவான் மாற்றிக் காட்டியுள்ளார்.

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது குறித்து அணித் தலைவர் விராத் கோஹ்லி கூறியதாவது, “இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். பந்தடிப்பாளர்களும் சிறந்த ஆட்டத் தை வெளிப்படுத்தினர். ஹார்திக் பாண்டியாவின் அதிரடியான ஆட்டம் அற்புதமாக இருந்தது. நாங்கள் 30 ஓட்டங்கள் கூடுதலாகவே எடுத்தது அதிர்ஷ்டம் தான்.

“புவனேஸ்வர்குமார் ஒரே ஓவரில் ஸ்மித்தையும், ஸ்டோனி சையும் வீழ்த்தினார். இதுவே ஆட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்திய திருப்பு முனையாகும்,” என்றார்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!