20 மி.கி தங்கத்தில் உலகக் கிண்ணம்

விழுப்புரம்: நகை தொழிலாளி ஒருவர் வெறும் 20 மில்லி கிராம் தங்கத்தில் கிரிக்கெட் உலகக் கிண்ண மாதிரியை வடிவமைத்து உள்ளார். 

இந்தியா, பாகிஸ்தான், உள் ளிட்ட 10 நாடுகள் பங்கேற்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் இங்கிலாந்தில் நடை பெற்று வருகின்றன. இதில் வாகை சூடும் அணிக்கு வழங் கப்படவுள்ள உலகக் கிண் ணத்தைப் போலவே, விழுப் புரத்தைச் சேர்ந்த நகை தொழி லாளி ரமேஷ், வெறும் 20 மில்லி கிராம் தங்கத்தில் மாதிரி உலகக் கிண்ணத்தை செய்து உள்ளார்.

60 ரூபாய் செலவில் செய்யப் பட்ட இந்த உலகக் கிண்ணம் ஒரு அரிசியின் உயரத்தைவிடக் குறைவாக உள்ளது. இதே போன்று கடந்த 2015லும் 40 மி.கி எடையில் ரமேஷ் செய்திருந் தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகிழ்ச்சியை சக வீரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பங்ளாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன் (வலக்கோடி). படம்: இணையம்

26 Jun 2019

பங்ளாதேஷ் அசத்தல் வெற்றி