மழையால் ஆட்டம் ரத்து; தென்னாப்பிரிக்காவுக்கு நெருக்கடி

செளத்ஹேம்டன்: மழையால் உலகக் கிண்ண கிரிக்கெட் ஆட் டம் ரத்து செய்யப்பட்டதால், தென்  ஆப்பிரிக்க அணி நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. எனவே பந்தடிப்பைத் தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணி 7.3 ஓவ ரில் 29 ஓட்டங்களுக்கு 2 விக் கெட்டுகளை இழந்து தத்தளித்தது.

தொடக்க வீரர்கள் ஆம்லா 6 ஓட்டங்களுக்கும் மார்க்கம் 5 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் மழை குறுக்கிட்ட தால் போட்டி கைவிடப்பட்டது.

எனவே இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. போட்டி ரத்தானதால் தென் ஆப் பிரிக்கா தனது முதல் புள்ளியைப் பெற்று உள்ளது. 

இதற்கு முன் விளையாடிய மூன்று போட்டிகளிலும் இங்கி லாந்து, பங்ளாதேஷ், இந்தியா ஆகிய அணிகளிடம் தோல்வியைச் சந்தித்துள்ள தென் ஆப்பிரிக்கா, இனிமேல் நடைபெற உள்ள ஐந்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அரை யிறுதிப் போட் டிக்குத் தகுதி பெற முடியும் என்ற நெருக்கடி நிலைக்குத் தள்ளப்பட்டு உள்ளது.

ஏற்கெனவே இதே தொடரில் இலங்கை - பாகிஸ்தான் போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இங்கிலாந்தின் தெற்கு, கிழக்குப் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்தியா - நியூசிலாந்து போட்டிகள் உட்பட சில போட்டிகள் ரத்தாக வாய்ப்பு உள்ளது என்று கூறப்படுகிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தமது முன்னாள் குழுவான ரியால் மட்ரிட்டுக்கு எதிராக இரண்டு கோல்களைப் போட்டு பிஎஸ்ஜி குழுவின் வெற்றிக்கு வித்திட்ட அர்ஜெண்டினா ஆட்டக்காரர் ஏங்கல் டி மரியா. படம்: ஏஎஃப்பி

20 Sep 2019

மூவர் இருந்தும் முடியவில்லை: ரியால் நிர்வாகி ஸிடான் வருத்தம்

பந்தைத் தக்கவைத்துக்கொள்ள போராடும் மான்செஸ்டர் சிட்டி குழுவின் நிக்கலஸ் ஓட்டாமெண்டி (இடது), ஷக்தர் டோனட்ஸ்க் குழுவின் ஜூனியர் மொராயஸ் (நடுவில்). படம்: ஏஎஃப்பி

20 Sep 2019

பிரமிக்க வைத்த பிரேசில் வீரர்