காயம் காரணமாக தவானுக்கு மூன்று வார ஓய்வு; இந்தியாவுக்கு பின்னடைவு

நாட்டிங்ஹம்: இந்திய நாளை நியூசிலாந்து அணியை எதிர் கொள்ளவுள்ள நிலையில், அதன் நட்சத்திர வீரர் ‌ஷிகர் தவான் காயம் காரணமாக அடுத்த மூன்று வாரங்களுக்கு விளையாட முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே நாளைய ஆட்டத்தில் தவானுக்குப் பதில் ரிஷப் பந்த் அல்லது அம்பாதி ராயுடு சேர்க்கப் படலாம் என்று தெரிகிறது. அதே நேரத்தில், 4ஆம் வீரராகப் பந்தடிப் பில் அனுபவம் பெற்ற ஷ்ரேயஸ் ஐயர் தேர்ந்தெடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நடை பெற்ற உலகக் கிண்ணப் போட்டி யில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்தியா வெற்றி பெற ‌ஷிகர் தவானின் அதிரடி சதம் ஒரு முக்கியக் காரணமாக இருந்தது. ஆட்டநாயகனாகவும் அவர் தேர்ந் தெடுக்கப்பட்டார்.

அதே சமயம் இந்த ஆட்டத்தில் தான், கம்மின்ஸ் வீசிய பந்து தவானின் இடது கைக்கட்டை விரலைப் பதம் பார்த்தது.

எனவே இந்தப் போட்டியில் தவானுக்குப் பதில் ரவீந்திர ஜடேஜா களக்காப்புச் செய்தார்.

அதன் பிறகு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் தவானுக்கு மூன்று வாரங்கள் ஓய் வளிக்கப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

எனவே, அவர் அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மாட்டார் என்று ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

மேலும் அவரது காயம் தீவிர மானது என உறுதியானால், அவர் உலகக் கிண்ணத் தொடரிலிருந்தே விலக நேரிடும் எனவும் உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் கூறகின் றன. 

இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தவான் விளாசிய சதம் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கய காரணமாகும். படம்: இணையம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மகிழ்ச்சியை சக வீரர்களுடன் பகிர்ந்துகொள்ளும் பங்ளாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன் (வலக்கோடி). படம்: இணையம்

26 Jun 2019

பங்ளாதேஷ் அசத்தல் வெற்றி