ஸ்காட்லாந்தை திக்குமுக்காட வைத்த பெல்ஜியம்

ஐரோப்பிய கிண்ண காற்பந்து தகுதிச் சுற்று ஆட்டங்களில் புதிய நிர்வாகியான ஸ்டீவ் கிளார்க்கின் பயிற்சியில் பெல்ஜியத்தை நேற்று அதிகாலை எதிர்கெண்ட ஸ்காட்லாந்து அணி திக்குமுக்காடியது.

அதேசமயம், பெல்ஜியம் இது வரை ஆடிய ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி வாகை சூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெல்ஜிய அணி சார்பாக மான்செஸ்டர் யுனைடெட் தாக்குதல் வீரர் ரொமேலு லுக்காக்கு முதல் பாதி முடியும் தறுவாயிலும், இரண்டாம் பாதி ஆட்டத்தின் 57ஆம் நிமிடத்திலும் இரு கோல்கள் போட்டு தமது அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

பின்னர், ஆட்டம் முடியும் வேளையில் மான்செஸ்டர் சிட்டி மத்திய திடல் வீரரான கெவின் டி பிரய்ன ஸ்காட்லாந்து கோல்காப்பாளர் தடுத்த பந்து தம்மை நோக்கி வர அதை கோல் வலைக்குள் புகுத்தி ஸ்காட்லாந்துக்கு எதிராக பெல்ஜியம் 3-=0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றிபெற வைத்தார்.

ஸ்காட்லாந்து அணியில் அதன் தலைவர் ஆண்டி ராபர்ட்சன் காயம் காரணமாக விளையாட மாட்டார் என்ற தகவல் அனைவரும் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றபோதிலும் எதிரணியினருக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் ஈடன் ஹசார்டுக்கு ஈடாக சக வீரர்கள் கோல் போட உதவும் ரயன் ஃபிரேசர் என்பவர் களமிறக்கப்படாதது பலருக்கு ஆச்சரியத்தை அளித்தது.

ரயன் ஃபிரேசர் போன்ற வீரர் பெல்ஜியம் போன்ற மிகத் திறமை வாய்ந்த குழுக்களை எதிர்கொள்ள ஸ்காட்லாந்துக்கு இன்றியமையாதது என காற்பந்து விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

அவருக்கு மாற்றாக களமிறக்கப்பட்ட ஸ்டுவர்ட் ஆம்ஸ்டிராங் என்பவர் கோல் போடக்கூடிய வாய்ப்பை ஆட்டத்தில் ஒருமுறை மட்டுமே ஏற்படுத்தித் தந்ததாகவும் அதன் பின்னர் காயம் ஏற்பட அவரும் ஆட்ட மைதானத்தை விட்டு வெளியேற நேர்ந்ததாக பிபிசி செய்தித் தகவல் கூறுகிறது. இனி, செப்டம்பர் மாதம் ஸ்காட்லாந்தின் ஹேம்ப்டன் நகரில் ரஷ்யா, பெல்ஜிய அணிகளுக்கு எதிரான இரண்டாம் சுற்று ஆட்டத்தில் ஸ்காட்லாந்து வென் றால்தான் அந்த அணி ஐரோப்பிய கிண்ண காற்பந்துப் போட்டிகளுக்குத் தகுதி பெறும் வாய்ப்பு சிறப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மற்றோர் ஆட்டத்தில் வேல்ஸ் ஹங்கேரியிடம் 0-=1 என்ற கோல் கணக்கில் தோற்றதால் அந்நாடு தகுதி பெறும் வாய்ப்பும் சிரமமான ஒன்றாகியுள்ளது.

வேல்ஸ் தாக்குதல் ஆட்டக் காரரும் ரியால் மட்ரிட் வீரருமான கேரத் பேல் கோல் போட தமக்குக் கிடைத்த பொன்னான வாய்ப்பை வீணடித்தார். ஆனால், இதற்கு நேர்மாறாக ஹங்கேரியின் தாக்குதல் வீரரான பட்காய் என்பவர் ஆட்டத்தின் 80ஆம் நிமிடத்தில் தமக்குக் கொடுக்கப்பட்ட பந்தை மிக லாவகமாக கோல் வலைக்குள் புகுத்தி ஹங்கேரிக்கு வெற்றிப் பரிசை வழங்கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!