புள்ளிப்பட்டியலில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்திய மழை

லண்டன்: மழையால் புள்ளிப்பட்டியலில் இலங்கை அணி 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளதுதான் பெரிய திருப்புமுனையாக உள்ளது. உலகக் கிண்ணத் தொடரில் மூன்று போட்டிகள் மழையினால் கைவிடப்பட்டன. அதனால் புள்ளிப்­பட்டியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. உலகக் கிண்ண தொடரில் மழையின் காரணமாக கைவிடப்பட்ட இன்றைய போட்டியையும் சேர்த்து மொத்தம் 16 லீக் போட்டிகள் நிறைவடைந்து உள்ளன. இதில் நியூசிலாந்து அணி மூன்று போட்டிகளில் வென்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 2 வெற்றி 1 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 2வது இடத்தில் உள்ளது.

இந்தியா 2 போட்டிகளிலும் வென்று 3வது இடத்திலும், ஆஸ்திரேலிய அணி 4வது இடத்திலும் உள்ளது. இலங்கை 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது தான் பெரிய திருப்புமுனையாக உள்ளது. அந்த அணியின் 2 போட்டிகள் மழையால் கைவிடப்பட்டதால் 2 புள்ளிகளைப் பெற்றது. இலங்கை 4 போட்டிகளில் 1 வெற்றி, 1 தோல்வி, 2 முடிவு இல்லை என மொத்தம் 4 புள்ளிகளைப் பெற்றுள்ளது. 6 மற்றும் 7வது இடங்களில் 3 புள்ளிகளுடன் பங்ளாதே‌ஷும் பாகிஸ்தானும் உள்ளன. பாகிஸ்தான் ஓட்ட விகிதத்தில் பங்ளாதேஷ் அணிக்கு அடுத்து, அரையிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெறும் என்று கணிக்கப்பட்ட தென்னாப்பிரிக்க அணி 4 போட்டிகளிலும் தோற்றது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான போட்டியின்போது மழையால் போட்டி கைவிடப்பட்டதால் 1 புள்ளி பெற்று 7வது இடத்தில் உள்ளது. 3 போட்டிகளிலும் தோற்று கடைசி இடத்தில் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!