ஸ்டீவ் வாக்: உலகக் கிண்ணத்தில்  பாண்டியா ஆதிக்கம் செலுத்துவார்

லண்டன்: 1999 உலகக் கிண்ணத்தில் ஆல்=ரவுண்டர் குளுஸ்னர் ஆதிக்கம் செலுத்தியதுபோல், தற்போது ஹார்திக் பாண்டியா மிளிர்வார் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் அணித் தலைவர் ஸ்டீவ் வாக் தெரிவித்துள்ளார்.

ஹார்திக் பாண்டியாவை 1999 உலகக் கிண்ண நாயகனுக்கு ஒப்பாகக் கூறிய ஸ்டீவ் வாக், இந்த உலகக் கிண்ணத்தில் ஆல்=­ரவுண்டர்கள் அதிக்கம் செலுத்துவர் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்திக் பாண்டியா அதில் முக்கியமானவராக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்காவது வீரராகக் களம் இறங்கிய பாண்டியா, 27 பந்தில் 48 ஓட்டங்கள் குவித்தார். இவரது அதிரடி ஆட்டத்தால் இந்தியா 352 ஓட்டங்கள் குவித்தது. இந்நிலையில் 1999ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் குளுஸ்னர் அபாரமான ஆட்டத்தை வெளிப்­படுத்தினார். நாக்அவுட் சுற்றில் தென்ஆப்பிரிக்கா தோல்வியடைந்தாலும், தொடர் நாயகன் விருதைத் தட்டிச்சென்றார்.

இந்நிலையில் ஹார்திக் பாண்டியாவை குளுஸ்னருடன் ஒப்பிட்டார் ஸ்டீவ் வாக். ஹார்திக் பாண்டியா குறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில் "ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹார்திக் பாண்டியா விளையாடிய அதிரடி ஆட்டம் மற்ற அணிகளுக்குப் பீதியைக் கிளப்பியிருக்கும்.

"1999ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் குளுஸ்னர் எப்படிச் செயல்பட்டாரோ, அதேபோல் ஹார்திக் பாண்டியா இந்த முறை ஆதிக்கம் செலுத்துவார். தனது அதிரடி ஆட்டத்தின்மூலம் போட்டியைச் சிறப்பாக முடிக்கும் திறமை அவரிடம் உள்ளது," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!