தடுமாறும் பாகிஸ்தான் அணியை தெறிக்கவிட தயாராகும் இந்தியா

ஓல்ட் டிராஃபர்ட்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் மட்டுமல்ல, உலகின் எந்த மூலையிலும் இந் தியா-, பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் என்றாலே ரசிகர் களுக்கு விருந்துதான்.

கிரிக்கெட் ரசிகர்களுக்கு நாளை அந்த விருந்து உண்டு. இந்த பரம எதிரிகள் மோதும் போட்டியில், வலிமையான இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தானால் எத்தனை ஓவர்கள் தாக்குப்பிடிக்க முடியும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர் களிடையே எழுந்துள்ளது.

அதற்கு காரணம் தான் விளை யாடிய மூன்று ஆட்டங்களில் இங் கிலாந்தை மட்டுமே வெற்றி கொண்ட பாகிஸ்தான் பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸ், ஆஸ் திரேலியாவிடம் தோற்றது.

பாகிஸ்தானின் இரண்டு தோல்விக்கும் காரணம் அதன் கவனக்குறைவான களக்காப்பு தான்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 3 முக்கிய கேட்சு களைத் தவறவிட்டது, முதல் 30 ஓவர்களில் ஒழுங்காக பந்துவீசா மல் ஓட்டங்களை விட்டுகொடுத் தது, 15 பந்துகளில் 3 விக்கெட்டை இழந்தது என எல்லாத் தரப்பிலும் மோசமாக உள்ளது பாகிஸ்தான்.

இந்தத் தடுமாற்றம் பந்தடிப்பு, பந்துவீச்சு, களக்காப்பு என அனைத்து தரப்பிலும் வலிமையாக இருக்கும் இந்திய அணிக்கு எதிராக நாளையும் தொடர்ந்தால் பாகிஸ்தானின் உலகக் கிண்ணக் கனவு மங்கிவிடும்.

இதற்கிடையே, இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்துக்கு பாகிஸ் தான் வீரர்கள் தயாராக வேண்டும் என அதன் அணித் தலைவர் சர்பராஸ் அகமது கூறியுள்ளார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், “இந் திய அணியின் பலமாக கருதப் படும் கோஹ்லி, ரோகித் சர்மாவின் விக்கெட்டுகளைக் குறி வைத்து பாகிஸ்தானின் பந்துவீச்சு இருக் கும்.

“அதிலும் வஹாப் ரியாஸ், முகமது அமீர் இருவரும் முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்த மும்முரம் காட்டுவார்கள்,” என்று கூறியுள் ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில அமீர் ஐந்து விக்கெட் டுகளை வீழ்த்தியது கவனிக்கத் தக்கது.

வாஹப் ரியாஸ் வீசிய பந்தில் கிடைத்த கேட்சுகளைத் தான் களக்காப்பில் கோட்டைவிட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

“இந்தியாவை வெல்ல வேண் டும் என்றால் நமது அணியின் களக்காப்பு, பந்துவீச்சை மேம் படுத்த வேண்டும்.

“இந்தியா வலிமையான அணி. அதனால் அதற்கான உத்தியை வகுக்க வேண்டும்,” என்றார் சர் பராஸ்.

புள்ளி விவரப்படி பார்த்தாலும் கடந்த 1992ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்ற 6 உலகக் கிண்ண ஆட்டங்களில் பாகிஸ்தான் ஒரு முறைகூட இந்தியாவை வென்ற தில்லை.

அதேசமயம், 2017ல் சாம்பியன்ஸ் கிண்ணத்தை பாகிஸ் தானிடம் பறிகொடுத்ததற்கு இந்தியா நிச்சயம் பழிதீர்க்கும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் கிரிக்கெட் ரசிகர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!