‘பாகிஸ்தானோடு விளையாட இந்தியாவிடம் கெஞ்சமாட்டோம்’

கராச்சி: பாகிஸ்தானோடு விளை யாடுங்கள் என்று இந்தியாவிடம் இனிமேல் கெஞ்சமாட்டோம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் இஷான் மானி ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்கு தலுக்குப்பின் இரு நாடுகளுக்கு இடையிலான நட்புறவு சீர்குலைந் ததால் கிரிக்கெட் விளையாடுவ தும் குறைந்தது.

முக்கியக் கிண்ணத்திற்கான போட்டிகள் தவிர, இருதரப்பு போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடுவது இல்லை.

கடைசியாக 2012=13ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடந்தது. அதன்பின் நடக்க வில்லை.

இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் இஷான் மானி ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “எங்களுடன் வந்து கிரிக்கெட் விளையாடுங்கள் என்று இந்தியாவை இனிமேல் கெஞ்சமாட்டோம். அதேசமயம், இரு நாடுகளுக்கு இடையிலான தொடரை நடத்தவும் வலியுறுத்து வோம்.

“வேறு எந்த நாட்டு அணியை யும் வலிந்துபோய் அழைக்கவும் மாட்டோம். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான இருநாட்டுக் கிரிக்கெட் தொடர் மிகவும் கண்ணியமாக, மதிப்பு டன் நடத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

“வெளிநாட்டு அணிகள் பாகிஸ்தானுக்கு வந்து கிரிக்கெட் விளையாடக் கோரி ஐசிசியிடம் வலியுறுத்துவோம்.

“தனிப்பட்ட உறவுகள் வேறு, கிரிக்கெட் உறவுகள் வேறு என்று எடுத்துரைப்போம். பாகிஸ்தானில் பாதுகாப்புச் சூழல்கள் முன்னேற் றமடைந்து நவீனப்படுத்தப்பட்டு விட்டது,” என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!