பணம் தராமல் பெயரைப் பயன்படுத்திய நிறுவனத்தின் மீது சச்சின் வழக்கு

பணம் தராமல் பெயரைப் பயன்படுத்திய நிறுவனத்தின் மீது சச்சின் வழக்கு

1 mins read

புதுடெல்லி: 'சச்சின் பை ஸ்பார்ட்டன்' என்ற பெயரில் கிரிக்கெட் விளையாட்டுச் சாதனங்களை விற்பனை செய்வதற்காக 2016ஆம் ஆண்டில் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கருடன் 1 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று ஒப்பந்தம் செய்திருந்தது.

இந்திய வம்சாவளியான குணால் ஷர்மா என்பவர் இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர். இந்நிலையில் ஒப்பந்தப்படி டெண்டுல்கரிடம் பேசிய தொகை அவருக்கு வழங்கப்பட­வில்லை. ஆனால் அந்த நிறுவனம் அவரது பெயரைப் பயன்படுத்தி பொருட்களை விற்கத் தொடங்கிவிட்டது. இதனால் சச்சின் சார்பில் அந்த நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரப்­பட்டுள்ளது.