ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை  வீழ்த்தி சாதித்த அசாம் இளைஞர்

கவுகாத்தி: அசாம் மாநில கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான அணிகளுக்கு இடையில் நூர்தின் அகமது கிண்ணப் போட்டி நடைபெற்று வருகிறது. ஓர் ஆட்டத்தில் சிவசாகர் = சாரைடியோ அணிகள் மோதின. சாரைடியோ அணி பந்தடிக்கும்போது சிவசாகர் அணியைச் சேர்ந்த 25 வயது இடது கை சுழற்பந்து வீச்சாளரான அர்பன் தத்தா 10 விக்கெட்டுக்களையும் கைப்பற்றி சாதனை படைத்தார்.

அவர் 19 ஓவரில் 48 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க, சாரைடியோ 121 ஓட்டங்களில் ஆல்அவுட் ஆனது. என்றாலும் இந்தப் போட்டி சமநிலையில் முடிந்துள்ளது. கடந்த ரஞ்சி கிண்ணத் தொடருக்கான அசாம் அணியில் இடம் பிடித்திருந்தார். அனைத்துலக கிரிக்கெட்டில் ஜிம் லேகர், அனில் கும்ப்ளே ஆகியோர் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளைச் சாய்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்­தக்கது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மாண்டரின் ஓரியண்டல் ஹோட்டலுக்கு வந்துசேர்ந்த காற்பந்து நட்சத்திரங்களான ஸ்பர்ஸ் குழுவின் சோங் ஹியூங் மின், லுக்கஸ் மோரா ஆகியோரை சிங்கப்பூர் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்பதோடு
அவர்களுடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

19 Jul 2019

ஸ்பர்ஸுக்கு வரவேற்பு