சுந்தர் பிச்சை: உலகக் கிண்ண  வெற்றி வாய்ப்பு இந்தியாவுக்கே அதிகம்

வா‌ஷிங்டன்: ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கூகல் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, “உலக கிண்ணத் தொட இறுதிப் போட்டியில் இங்கிலாந்து - இந்திய அணிகள் மோதும். இதில் வெற்றி வாய்ப்பு இந்தியாவுக்கே அதிகம் உள்ளது," என்றார். மேலும் அவர் கூறுகையில், "நான் அமெரிக்காவுக்கு வந்த புதிதில் 'பேஸ் பால்' விளையாட முயற்சி செய்தேன்.

முதல் போட்டியில் நான் பந்தை பின்புறமாக அடித்தேன். கிரிக்கெட்டில் அது ஒரு நல்ல ஷாட். பேஸ்பால் விளையாடும்­போது கிரிக்கெட்டைப் போலவே பேட்டை நான் எடுத்துக்கொண்டே ஒடினேன். கிரிக்கெட் என்னிடம் முழுமையாக ஒட்டிக்கொண்டிருப்பதை அப்போது நான் உணர்ந்தேன்," என்றார் சுந்தர் பிச்சை.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பயிற்சிக்காக ஜேடபிள்யூ மரியாட் ஹோட்டலைவிட்டு வெளியேறும் இத்தாலியின் இன்டர் மிலான் காற்பந்துக் குழு ஆட்டக்காரர்கள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

18 Jul 2019

சிங்கப்பூர் வந்தது இன்டர் மிலான் குழு