இந்தியா = பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டத்தில் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி 57 ஓட்டங்களை எடுத்தபோது ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் தனது 11,000 ஓட்டங்களைப் பதிவு செய்தார். அவர் 222 இன்னிங்சில் இந்த ஓட்டத்தைக் கடந்தார். இதன்மூலம் 11,000 ஓட்டங்களை விரைவாகக் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். இதற்கு முன் சச்சின் டெண்டுல்கர் 276 இன்னிங்சில் 11,000 ஓட்டங்களை கடந்ததே சாதனையாக இருந்தது. விராத் கோஹ்லி தற்போது அதை முறியடித்துள்ளார். ரிக்கி பாண்டிங் 286 இன்னிங்ஸ் உடன் 3வது இடத்திலும், கங்குலி 288 இன்னிங்ஸ் உடன் 4வது இடத்திலும், கல்லீஸ் 293 இன்னிங்ஸ் உடன் 5வது இடத்திலும் உள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர் 10,000 ஓட்டங்களில் இருந்து 11,000 ஓட்டங்களைக் கடக்க 17 இன்னிங்ஸ் மட்டுமே எடுத்துக் கொண்டார். அதேபோல்தான் விராத் கோஹ்லியும் 17 இன்னிங்சில் 10,000 ஓட்டங்களில் இருந்து 11,000 ஓட்டங்களைக் கடக்க எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

