ஷாகிப் அல் ஹசன் சாதனை

ஷாகிப் அல் ஹசன் சாதனை

1 mins read

டான்டன்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஆட்டத்தில் முன்னாள் பங்ளாதேஷ் அணித் தலைவர் ஷாகிப் அல் ஹசன் (படம்) 124 ஓட்டங்களைக் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.

நேற்று முன்தினம் அவர் 23வது ஓட்டத்தை எடுத்தபோது ஒருநாள் போட்டியில் 6,000 ஓட்டங்களைத் தொட்டார். 202 இன்னிங்சில் 6,101 ஓட்டங்களை அவர் எடுத்து உள்ளார். இதில் 9 சதமும் 44 அரை சதமும் அடங்கும்.

அவரது சராசரி ஓட்ட விகிதம் 37.42 ஆகும். 6,000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ள 2வது பங்ளாதேஷ் வீரர் ஷாகிப் அல் ஹசன். 6,743 ஓட்டங்களுடன் தமிம் இக்பால் முதல் இடத்தில் உள்ளார். இந்த உலகக் கிண்ண ஆட்டங்களில் 2 சதம் அடித்தவர்கள் பட்டியலில் ஷாகிப் அல் ஹசன் இணைந்துள்ளார். அவர் ஏற்கெனவே இங்கிலாந்துக்கு எதிராக 121 ஓட்டங்களைக் குவித்தார். இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் (107, 100), இந்திய தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா (122, 140) ஆகியோர் 2 சதம் அடித்து உள்ளனர்.