பாரிஸ்: ஐரோப்பிய காற்பந்துச் சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் மிஷல் பிளாட்டினி (படம்) நேற்று கைது செய்யப்பட்டார். கத்தாரில் 2022ஆம் ஆண்டு நடைபெற உள்ள உலகக் கிண்ண காற்பந்து தொடர்பான விசாரணைக்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சில தகவல்கள் கூறின. ஒரு காலத்தில் பிரான்ஸ் காற்பந்து நட்சத்திரமாக ஜொலித்த பிளாட்டினியை பிரான்ஸ் லஞ்ச ஒழிப்பு போலிசார் தங்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக ஏஎஃப்பி கூறியது.
மிஷல் பிளாட்டினி கைது
1 mins read

