அரை இறுதியை நோக்கி முன்னேறும் பங்ளாதேஷ்

டான்டன்: இந்த உலகக் கிண்ணப் போட்டியில் பங்ளாதேஷ் அணி இரண்டாவது பெரிய வெற்றியைப் பெற்று எல்லாரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. முன்னாள் உலகக் கிண்ண வெற்றியாளரான வெஸ்ட் இண்டீசை ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அது வீழ்த்தி சாதனை படைத்தது.

பூவா தலையாவில் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த பங்ளாதேஷ் அணி. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்கள் குவித்தது.

ஷாய் ஹோப் 121 பந்துகளில் 96 ஓட்டங்களும் (4 பவுண்டரி, 1 சிக்சர்), லிவிஸ் 67 பந்தில் 70 ஓட்டங்களும் (6 பவுண்டரி, 2 சிக்சர்), ஹெட்மையர் 26 பந்தில் 50 ஓட்டங்களும் (4 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்தனர். முகமது சைபுதீன், முஷ்டாபிஜூர் ரகுமான் தலா 3 விக்கெட்டும், ஷாகிப் அல் ஹசன் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.

இந்த இமாலய ஓட்ட எண்ணிக்கையை பங்ளாதேஷ் துரத்தி வென்றது. முன்னாள் அணித் தலைவர் ஷாகிப் அல் ஹசனின் அபார சதத்தால் 41.3 ஓவர்களிலேயே அது அந்த இலக்கை எட்டியது. மூன்று விக்கெட் இழப்புக்கு 322 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை ஊதித் தள்ளியது சாதாரண அணியான பங்ளாதேஷ்.

ஷாகிப் அல் ஹசன் 99 பந்தில் 124 ஓட்டங்களையும் (16 பவுண்டரி), லிட்டன் தாஸ் 69 பந்தில் 94 ஓட்டங்களையும் (8 பவுண்டரி, 4 சிக்சர்), தமிம் இக்பால் 48 ஓட்டங்களையும் குவித்தது பங்ளாதேஷ் அணியின் வெற்றியை எளிதாக்கியது. லிட்டன் தாசுக்கு இது முதல் உலகக் கிண்ண போட்டியாகும்.

2 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடிவு இல்லை (1) என 5 புள்ளிகளுடன் இருக்கும் பங்ளாதேஷ் நாளை ஆஸ்திரேலியாவைச் சந்திக்கிறது. வெஸ்ட் இண்டீசை வெற்றிகொண்டதன் மூலம் அரை இறுதிக்கான வாய்ப்பு பங்ளாதே‌ஷுக்கு பிரகாசமாகி உள்ளது.

அதேநேரம் வெஸ்ட் இண்டீசின் நிலைமை மோசமாகிவிட்டது. 1 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவு இல்லை (1) என 3 புள்ளிளை மட்டுமே வைத்திருக்கும் வெஸ்ட் இண்டீஸ் அடுத்து வரக்கூடிய நான்கு ஆட்டங்களிலும் வெற்றிபெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. வரும் சனிக்கிழமை நியூசிலாந்துடனும் 27ஆம் தேதி இந்தியாவுடனும் விளையாடுகிறது அந்த அணி.

வெற்றி குறித்து பங்ளாதேஷ் அணித் தலைவர் மோர்டாசா கூறுகையில், "முஷ்டாபிஜுர் ரகுமான் ஒரே ஓவரில் 2 விக்கெட்களைக் கைப்பற்றியதே ஆட்டத்தின் திருப்புமுனை. இதனால்தான் வெஸ்ட் இண்டீஸின் ஓட்ட குவிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

"ஷாகிப் அல் ஹசன் எங்கள் அணியின் பந்ததடிப்பில் முக்கியத்துவம் பெற்றவர். அவர் ஓர் அபூர்வமான வீரர். அவரைப்போல மற்ற வீரர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஒவ்வோர் ஆட்டத்திலும் அவர் ஓட்டங்களைக் குவித்து வருகிறார். அவருக்குப் பக்கபலமாக லிட்டன் தாஸ் விளையாடினார்," என்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!