ஜப்பான் வீரர்களைத் திணறடித்த சிலி

சாவ் பாலோ (பிரேசில்): கோப்பா அமெரிக்கா காற்பந்துத் தொடர் பிரேசிலின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. தென்அமெரிக்கக் கண்டத்தில் உள்ள 10 அணிகளோடு ஆசியாவைச் சேர்ந்த ஜப்பான், கத்தார் அணிகள் சிறப்பு அழைப்பின் பேரில் பங்கேற்றுள்ளன.

12 அணிகளும் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன. நேற்று அதிகாலை நடைபெற்ற 'சி' பிரிவு லீக் ஆட்டத்தில் பலம் கொண்ட சிலி அணியும் ஜப்பானும் மோதின. கோப்பா அமெரிக்கக் காற்பந்து வெற்றியாளர் பட்டத்தைப் பலமுறைத் தட்டிச் சென்ற சிலி வீரர்களை, அனுபவமற்ற இளம் ஜப்பானிய வீர்ர்கள் எதிர்கொள்ள முடியாமல் துவக்கம் முதலே திணறினர்.

மான்செஸ்டர் யுனைடெட்டின் அலெக்ஸிஸ் சான்செஸ் சுமார் ஐந்து மாதங்களுக்குப் பிறகு இந்த ஆட்டத்தில் தமது முதல் கோலைப் போட்டார். இறுதியில், சிலி 4=0 என்ற எண்ணிக்கையில் ஜப்பானை வீழ்த்தி தொடரின் வெற்றிக்கணக்கை தொடங்கியது. வர்காஸ் 2 கோல்களும் புல்கர், சான்செஸ் ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். சிலி நாளை மறுதினம் எக்வடோரைச் சந்திக்கிறது. அதேபோல ஜப்பான் அணி நாளை உருகுவேயுடன் விளையாடுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!