வலுவான நிலையில் உள்ள இங்கிலாந்து அணி

மான்செஸ்டர்: அணித் தலைவர் இயான் மோர்கனின் அதிரடி ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் அணியை 150 ஓட்டங்கள் வித்தி யாசத்தில் வீழ்த்திய இங்கிலாந்து, உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் புள்ளிப் பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியது (நேற்றைய நிலவரப்படி). மான்செஸ் டரில் முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் பூவா தலையாவில் வென்ற இங்கிலாந்து பந்தடிப்பைத் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு அதன் பந்தடிப்பாளர்கள் பெரிதும் கை கொடுத்தனர். தொடக்க ஆட்டக் காரர் பேர்ஸ்டோவ் சிறப்பாக விளையாடி 90 ஓட்டங்களை எடுத்தார். அதேபோல் ஜோ ரூட் 88 ஓட்டங் களை குவித்தார்.

ஆனால், இங்கிலாந்தின் சிகர மாக அமைந்தது மோர்கனின் அதிரடி ஆட்டம்தான். 71 பந்து களில் 17 ‘சிக்சர்’களையும் நான்கு ‘பவுண்டரி’களையும் விளாசி அவர் எடுத்த 148 ஓட்டங்கள் பெரிதும் கைகொடுக்க, இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் ஆறு விக்கெட்டுகள் இழப்புக்கு சாதனை அளவாக 397 ஓட்டங் களைக் குவித்தது.

398 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்குத் தொடக்கமே சிறப்பாக அமையவில்லை.

நிதானமாக விளையாடிய ஹஸ்மத்துல்லா அதிகபட்சமாக 76 ஓட்டங்களை எடுத்தார்.

ஆனால், அந்த அணியின் பல வீரர்கள் ஒற்றை இலக்கை தாண்ட வில்லை. இறுதியில் ஆப்கானிஸ் தான் அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 247 ஓட்டங்களை மட்டும் எடுத்து தோல்வியைச் சந்தித்தது. ஆட்ட நாயகன் விருதை இங்கிலாந்தின் மோர்கன் வென்றார்.

நடப்பு உலகக் கிண்ணப் போட்டியில் இதுவரை ஐந்து போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து, நான்கு போட்டிகளில் வென்றுள்ளது. அவற்றில் இரு போட்டிகளில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

மிகவும் வலுவான பந்தடிப்பு, உள்ளூர் சூழலுக்கு ஏற்ற திறன் வாய்ந்த பந்துவீச்சு என மிகவும் நன்றாக விளையாடிவரும் இங்கி லாந்து அணி உலகக் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

அதேபோல் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் ஆகிய அணிகளை வென்று நல்ல நிலையில் உள்ள இந்தியாவும் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புள்ள அணியாகக் கருதப்படுகிறது.

இதனால் வரும் 30ஆம் தேதி நடக்கவுள்ள இந்தியா, இங்கி லாந்து அணிகளுக்கு இடையி லான போட்டி மிகவும் பரபரப்பான போட்டியாகவும் இந்தியாவுக்குச் சவால் மிகுந்ததாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!