மூன்று முறை பந்தை வலைக்குள் புகுத்தியும்  கோல் மறுக்கப்பட்டதால் பிரேசிலுக்கு ஏமாற்றம்

சால்வடோர்: தென்னமெரிக்க காற் பந்துக் குழுக்கள் பங்கேற்கும் ‘கோப்பா அமெரிக்கா’ போட்டியின் ‘ஏ’ பிரிவில் நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் போட்டியை ஏற்று நடத்தும் பிரேசில், வெனிசுவேலா வுடன் கோல் எதுவுமின்றி சமநிலை கண்டது.

இந்த ஆட்டத்தில் வென்றிருக்க வேண்டிய பிரேசில், கோல் போடும் பல வாய்ப்புகளை வீணடித்தது.

ஆனால் குறிப்பிடும்படியாக, தப்பாட்டம் உள்ளிட்ட காரணங் களால் அந்தக் குழு மூன்று தருணங்களில் எதிரணியின் வலைக்குள் பந்தைப் புகுத்தினாலும் கோல் செல்லாது என்று நடுவர் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த முடிவு பிரேசில் ஆட்டக்காரர் களுக்கு ஏமாற்றத்தையும் எரிச் சலையும் தந்தது.

ஆட்டத்தின் முதல் பாதி முடிவடையவுள்ள வேளையில், இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் லிவர்பூல் குழுவுக்கு விளையாடி வரும் தாக்குதல் ஆட்டக்காரர் ரொபேர்ட்டோ ஃபர்மின்யோ பந்தை வலைக்குள் அனுப்பினார். ஆனால் தப்பாட்டம் காரணமாக நடுவர் அந்த கோலை ஏற்க மறுத்துவிட்டார்.

ஆட்டத்தின் இரண்டாவது பாதி தொடங்கி 15 நிமிடங்கள் கழித்து பிரேசில் குழு தரப்பில் மாற்று ஆட்டக்காரர் கேப்ரியல் ஜீசஸ் பந்தை வலைக்குள் புகுத் தினார். ஆனால் அவருக்கு பந்தை அனுப்பிய சகவீரர் ஃபர்மின்யோ ‘ஆஃப்சைட்’ நிலையில் இருந்ததாக ‘வீஏஆர்’ எனப்படும் காணொளி உதவி நடுவர் தீர்ப்பளித்தது. அதனால் அந்த கோலும் ஏற்றுக்கொள்ளப்பட வில்லை.

சற்று நேரம் கழித்து மற்றொரு பிரேசிலிய ஆட்டக்காரர் பிலிப்பே கொட்டின்யோ பந்தை மீண்டும் வலைக்குள் அனுப்பினார்.

ஆனால், இதிலும் தலையிட்ட ‘வீஏஆர்’ தொழில்நுட்பம், கோல் வழங்க மறுத்துவிட்டது.

மேற்கூறப்பட்ட இந்தக் கார ணங்களால் பெரும் முயற்சி செய்த பிரேசிலுக்கு ஒரு கோல்கூட கிடைக்காமல் போய்விட்டது.

இந்த ஆட்டம் முடிவடைந்த நிலையில், ‘ஏ’ பிரிவில் நான்கு புள்ளிகளுடன் பிரேசில் முன்னிலை வகிக்கிறது. முந்தைய ஆட்டத்தில் பொலிவியா குழுவை 3-1 எனும் கோல் எண்ணிக்கையில் தோற்கடித்த பெரு, அதே நான்கு புள்ளிகளைப் பெற்றிருந்தாலும் கோல் வித்தியாசத்தில் இரண்டாம் நிலையில் உள்ளது.

வரும் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெறவுள்ள இந்தப் பிரிவின் விறுவிறுப்பான கடைசி ஆட்டத்தில் பிரேசில், பெரு குழுக்கள் மோதுகின்றன.

‘கோப்பா அமெரிக்கா’ போட்டியின் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதி பெற, எதிர்வரும் ஆட்டத்தில் இரு குழுக்களும் சமநிலை கண்டால் போதும்.

அப்பிரிவில் இரு புள்ளிகளுடன் வெனிசுவேலா மூன்றாம் நிலை யிலும் ஒரு புள்ளிக்கூட பெறாத பொலிவியா கடைசி நிலையிலும் உள்ளன.

‘கோப்பா அமெரிக்கா’ காற்பந்துப் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் வெனிசுவேலா குழுவின் ஜூனியர் மொரினோவுடன் பந்துக்காக மோதும் பிரேசிலின் டேனி ஆல்வேஸ் (மஞ்சள் நிற சீருடையில்).

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!