நோட்டிங்ஹமில் நடக்கும் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நேற்று ஆஸ்திரேலிய அணியும் பங்ளாதேஷ் அணியும் பொருதுவதற்கு முன்னர் பங்ளாதேஷ் கிரிக்கெட் ரசிகர்கள் புலியைப் போல் வேடமிட்டு மிரட்டினர். பங்ளாதேஷ் அணி 5 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 2 தோல்வி, ஒரு முடி
வில்லை என்று 5 புள்ளி பெற்றுள்ளது. இதில் தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து வியப்பூட்டிய பங்ளாதேஷ், நடப்பு வெற்றியாளரான ஆஸ்திரேலி யாவுக்கும் 'வேட்டு' வைக்கும் நம்பிக்கையுடன் வியூகங்களை வகுத்துள்ளது. படம்: ராய்ட்டர்ஸ்

