ஸ்பெயின் காற்பந்து பயிற்றுவிப்பாளர்  லுயி என்ரிக்கே பதவி விலகினார்

ஸ்பானிய காற்பந்து பயிற்று விப்பாளரான லுயி என்ரிக்கே தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பார்சிலோனா காற்பந்து பயிற்றுவிப்பாளரான என்ரிக்கே கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான் இரண்டாண்டு ஒப்பந்தத்தின்கீழ் ஸ்பெயின் குழுவின் பயிற்றுவிப்பாளராக பொறுப்பேற்றார் என்பது நினைவுகூரத்தக்கது. இவ ருக்கு பதிலாக துணை பயிற்று விப்பாளராக உள்ள ராபர்ட் மெரினோ ஸ்பானிய காற்பந்துக் குழுவை அடுத்தாண்டு ஐரோப்பிய காற்பந்துக் கிண்ணப் போட்டிகளுக்காக தயார் செய்வார் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் ஸ்பெயின் தோல்வியடைந்து வெளி யேறியதைத் தொடர்ந்து 49 வயது திரு லுயி என்ரிக்கே ஸ்பானிய குழுவிற்கு பயிற்று விப்பாளராகப் பொறுப்பேற்றார்.

“இது லுயி என்ரிக்கே தாமாக எடுத்த முடிவு. அதற்கு நாங்கள் நன்றியுடையவர்களாக உள்ளோம். அவரைப் பற்றிய நினைவலைகள் எங்கள் உள்ளங் களில் நன்கு பதிந்துள்ளது. இது அவரது தனிப்பட்ட முடிவு. அது எங்களைச் சார்ந்தது அல்ல.

இதுவே சிறந்த முடிவு என நாங் கள் கருதுகிறோம்,” என்று ஸ்பா னிய காற்பந்து கூட்டமைப்பின் தலைவரான லுயி ருபியல்ஸ் கருத்துரைத்தார்.

இது குறித்து கூறிய லுயி என்ரிக்கே, தம்மீது நம்பிக்கை வைத்தற்கும் நிலைமையைப் புரிந்துகொண்டதற்கும் ஸ்பானிய காற்பந்துக் கூட்டமைப்புக்கு தமது நன்றியைத் தெரிவிக்கும் அறிக்கை ஒன்றை வெளியிட்டதாக ‘ஆர்இஎஃப்’ எனப்படும் இணை யத்தள செய்தி கூறியது.

என்ரிக்கே தலைமையின்கீழ் ஸ்பெயின் தேசிய லீக் கிண்ணக் காற்பந்துப் போட்டிகளின் அரையிறுதிக்குத் தகுதி பெற தவறியது.

தற்பொழுது ஐரோப்பிய கிண்ணக் காற்பந்துப் போட்டிகளுக்கு ஸ்பானியக் குழுவை தயார்ப்படுத்தும் பொறுப்பேற்றுக் கொண்டிருக்கும் ராபர்ட் மொரினோவின் தலைமையின்கீழ் ஸ்பெயின் இதுவரை மால்டா, ஃபாரோ தீவுகள், ஸ்வீடன் ஆகிய மூன்று நாடுகளுக்கு எதிராக விளையாடிய ஆட்டங்களில் வென்றுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!