போராடித் தோற்றது பங்ளாதேஷ்; முதல் இடத்திற்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

போராடித் தோற்றது பங்ளாதேஷ்; முதல் இடத்திற்கு முன்னேறியது ஆஸ்திரேலியா

2 mins read
4d032351-474c-464a-8bbc-9cd3c4afcb0a
உலகக் கிண்ணப் போட்டியில் இரண்டாவது முறையாக 150 ஓட்டங்களைக் கடந்த முதல் நபர் என்ற புதிய சாதனையைப் புரிந்துள்ளார் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர். இதற்கு முன் 2015ல் உலகக் கிண்ணப் போட்டி யின் போது ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் 178 ஓட்டங்கள் எடுத்திருந்தார். படம்: இணையம் -

நாட்டிங்ஹம்: வார்னரின் சதத் திற்கு எதிர்சதம் அடித்தும் ஆஸ் திரேலிய கிரிக்கெட் அணியிடம் 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது பங்ளா தேஷ்.

ஆஸ்திரேலியா, பங்ளாதேஷ் அணிகளுக்கு இடையேயான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின் டிரென்ட் பிரிட்ஜ் மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

பூவாதலையாவில் வென்ற ஆஸ்திரேலிய அணித் தலைவர் ஆரோன் பிஞ்ச் பந்தடிப்பைத் தேர்வு செய்தார்.

அதன்படி ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்­கெட்டை இழந்து 381 ஓட்டங்கள் எடுத்தது.

அதிகபட்சமாக வார்னர் 166 ஓட்டங்களும் ஏரோன் பிஞ்ச் (53) கவாஜா (89) ஓட்டமும் எடுத்தனர்.

பின்னர் 382 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் பங்ளாதேஷ் அணி பந்தடிப்பைத் தொடங்கியது.

தொடக்க வீரர்களாக தமிம் இக்பாலும் களமிறங்கிய சௌமியா சர்காரும் 10 ஓட்டங்களில் வெளி யேறினார்.

அடுத்து வந்த ஷகிப் அல் ஹசன் 41 ஓட்டங்கள் எடுத்து விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

அதைத்தொடர்ந்து வந்த முஷ்ஃபிகுர் ரஹிம், தமிம் இக்பாலுடன் ஜோடி சேர்ந்து ஆடினார். இருவரும் பொறுப்புடன் ஆடி ஓட்டங்களைச் சேர்த்தனர்.

தமிம் இக்பால் 62 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லிட்டான் தாஸ் 20 ஓட்டங்களிலும் மக்முதுல்லா 69 ஓட்டங்களிலும் விக்கெட்டைப் பறிகொடுத்­தனர். முஷ்ஃபிகுர் ரஹிம் 97 பந்து களில் 9 பவுண்டரி 1 சிக்சருடன் சதமடித்தார்.

இறுதியில் பங்ளாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 333 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் ஆஸ்திரேலிய அணி 48 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் ஆஸ்­திரேலிய அணி 10 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. பங்ளாதேஷ் 5 புள்ளிகளுடன் நிகர ஓட்ட விகிதம் -0.407 என்று 5ஆம் இடத்தில் உள்ளது.