இங்கிலாந்துக்கு எதிராக தடுமாறியது இலங்கை

இங்கிலாந்துக்கு எதிராக தடுமாறியது இலங்கை

1 mins read

லீட்ஸ்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியிடம் சீரான இடைவெளி­யில் விக்கெட்டுகளைப் பறி கொடுத்து தடுமாறியது இலங்கை. உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்த அணிகள் நேற்று மோதின.

பூவா தலையாவில் வென்று பந்தடிப்பைத் தேர்வுசெய்த இலங்கை அணியில் சிறிவர்­தனா, திரிமான்னே நீக்கப்பட்டு அவிஷ்கா பெர்னாண்டோ, ஜீவன் மெண்டிஸ் சேர்க்கப்பட்டிருந்த னர். இங்கிலாந்து அணியில் அடில், மொயீன் அலி சேர்க்கப் பட்டிருந்தனர். முதல் 13 ஓவரி­லேயே 3 விக்­கெட்டுகளை இழந்து தடுமாறியது இலங்கை. அந்த அணியின் ஓட்ட எண்ணிக்கை 200ஐ தாண்டியதற்கு மேத்யூஸின் நிதான ஆட்டம்தான் காரணம். அவர் 85 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இங்கிலாந்து அணி சார்பில் ஆர்ச்சர், வுட்ஸ் இருவரும் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர். ர‌ஷுத் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

சிங்கப்பூர் நேரப்படி நேற்று இரவு 9 மணி வரை இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில்

9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 232 ஓட்டங்கள் எடுத்திருந்தது.