அரையிறுதி வாய்ப்பை இந்தியா வலுப்படுத்தும்

சௌத்ஹேம்டன்: கிரிக்கெட் உலகக் கிண்ணப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய உத்வேகத் தில் உள்ள இந்திய அணி, இன்று ஆப்கானிஸ்தானை எளிதில் வெற்றிகொள்ளும் என்ற எதிர் பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

உலகக் கிண்ணத் தொடரில் இதுவரை ஆடிய ஆட்டங்களில் ஒரு தோல்வியைக்கூட சந்திக்காத இந்திய அணியை எதிர்த்து விளையாட போகிறது ஒரு வெற்றி யைக்கூட சுவைக்காத ஆப்­கானிஸ்தான் அணி.

தொடக்க ஆட்டக்காரர்களின் வலுவான அடித்தளம், பந்துவீச்சா ளர்களின் விக்கெட்டுகளைக் கைப்­பற்றும் திறன், அபாரமான களக்காப்பு என ஏறுமுகத்தில் உள்ளது இந்திய அணி.

ஆனால், காயம் காரணமாக ஏற்கெனவே பந்தடிப்பாளர் தவான் இத்தொடரில் இருந்து விலகிய நிலையில், பந்துவீச்சாளர் புவ னேஸ்­வர் குமாரும் தசைநார் காயத்தால் அடுத்த மூன்று போட் டிகளில் விளையாடமுடியாது.

தவானுக்குப் பதிலாக இந்திய அணியில் இடம்பிடித்த விஜய் சங் கர் இந்திய அணியில் காயம் அடைந்துள்ள மூன்றாவது வீரர்.

புதன்கிழமை நடந்த பயிற்சி ஆட்டத்தின்போது பும்ராவின் யார்கர் பந்து விஜய் சங்கரின் கால் விரல்களைப் பதம் பார்த்தது.

இதுபற்றி கூறிய பும்ரா, “விஜய் சங்கர் காயமடைந்து துரதிர்ஷ்ட வசமானது. இதுபோன்ற நிகழ்வு கள் விளையாட்டில் ஒரு பகுதி. ஆனால் அவர் நலமாக உள்ளார்,” என்றார். அச்சப்படும் வகை­யிலான காயம் எதுவும் விஜய் சங்கருக்கு ஏற்படவில்லை எனவும் அவருக்கு வலி மட்டுமே இருப்பதாகவும் அணி நிர்வாகம் தெரிவித்து உள்­ளது.

ஆயினும் வியாழனன்று வலைப் பயிற்சியில் விஜய் சங்கர் பங்கேற் காததால் இன்றைய போட்டியில் அவர் விளையாடுவாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

ஒருவேளை அவர் விலகினால், ரிஷப் பந்த்திற்கோ, தினேஷ் கார்த்திக்கிற்கோ வாய்ப்பளிக்கப் படலாம் என்று கூறப்படுகிறது. அதேபோல் புவனேஸ்வர் குமார் இடத்தை முகமது ஷமி நிரப்பு கிறார். முக்கிய வீரர்கள் வெளியேறினாலும் ரோகித் சர்மா, ராகுல், கோஹ்லி, ஹர்த்திக் பாண்டியா, பும்ரா என ஒவ்வொருவரும் தங்களது முழுத் திறனையும் வெளிப்­படுத்துவதால் இந்திய அணி வலுவாகவே உள்ளது.

இந்நிலையில், ஒரு வெற்றி யாவது பெற்றுவிட வேண்டும் என்ற தவிப்பில் உள்ளது ஆப்கா னிஸ்தான். பந்தடிப்பிலும் களக்காப்பிலும் தவறுகளைத் திருத்தி மேம்பட்ட ஆட்டத்தை வெளிப்­படுத்தி­னால்தான் இன்று இந்தியா­விற்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானால் தாக்குப்பிடிக்க முடியும்.

ஆனால், இந்திய அணியோ பலவீனமான ஆப்கானிஸ்தானை வெற்றிகொள்ள மட்டுமல்லாமல், தனது ஓட்ட விகிதத்தையும் அதிக ரிக்க முயலும்.

ஏழு புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ள இந்திய அணிக்கு அதிகமான ஓட்ட விகிதம் அரை­யிறுதி வாய்ப்பை வலுவடையச் செய்யும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட அணி கள் ஒரே புள்ளிகள் பெற்றிருக்கும் பட்சத்தில், ஓட்ட விகிதத்தின்படி அரையிறுதி வாய்ப்பு கிட்டும்.

மிரட்டும் மழை

வியாழக்கிழமை ஹேம்ஸ்‌ஷியர் பவுல் மைதானத்தில் இந்திய அணி வலைப்பயிற்சியை முடித்து விட்ட திரும்பியபோது மழை மேகம் சூழ்ந்திருந்தது.

இந்திய அணியைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணி வலைப் பயிற்சிக்குச் சென்றபோது லேசான மழைத் தூறல் மிரட்டத் தொடங் கியது.

எனவே மைதான ஊழியர் கள் உடனடியாக ஆடுகளத்தை மூடினர். இன்றைய வானிலை அறிக்கை யின்படி மழைக்கு வாய்ப்பில்லை என்று கூறப்பட்டிருந்தாலும் மழை பெய்யக்கூடாது என்று ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!