லீட்ஸ்: இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் எதிர்பாராத தோல்வி யும் இலங்கை அணியின் திடீர் எழுச்சியும் உலகக் கிண்ணப் போட்டியை சுவாரசியமானதாக வும் பரபரப்பாகவும் மாற்றியுள்ளது.
இதனால் அடுத்து வரும் லீக் ஆட்டங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்தத் தோல்வியால் இங்கிலாந்தின் அரையிறுதி வாய்ப்பும் கேள்விக்குறியாகியுள்ளது. கார ணம் அடுத்து வரும் ஆஸ் திரேலியா, இந்தியா, நியூசிலாந் துக்கு எதிரான ஆட்டங்கள் இங்கிலாந்துக்கு கடும் சவாலாக இருக்கும். இந்த அணிகளை 1992ஆம் ஆண்டிற்குப் பிறகு உலகக் கிண்ணப் போட்டிகளில் இங்கி லாந்து வென்றதில்லை என்கிறது புள்ளிவிவரங்கள்.
பலமுறை 300 ஓட்டங்களைத் தாண்டிய இங்கிலாந்து அணி யால் 233 ஓட்டங்களை விரட்ட முடியாமல் சரணடைந்தது இங்கி லாந்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையிடம் அடைந்த தோல்வி குறித்து பேசிய இங்கி லாந்து அணித் தலைவர் மோர் கன், "இலக்கை விரட்டும் போது எப்படி விளையாட வேண்டும் என்பதை வீரர்கள் மறந்துவிட்ட னர்.
"இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் பங்காளித்துவம் என்ப பது முக்கியமான ஒன்று.
"எங்களது ஆட்டத் திறனைச் செயல்படுத்துவதில் தவறுகள் செய்துவிட்டோம்.
"இந்த ஆடுகளத்தில் பந்து வீச்சை எதிர்கொள்வது சவாலாக இருந்தது. நாங்கள் அடுத்த போட்டியில் எழுச்சி பெறுவோம். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆக்ரோஷமாக ஆடுவோம்," இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே நிகழ்ச்சி ஒன் றில் பேசிய இங்கிலாந்து முன் னாள் வீரர்களான ராபின் ஸ்மித், பாப் வில்லிஸ், "இங்கிலாந்து 233 ஓட்ட இலக்கை வழக்கம் போல் அதிரடி முறையில் அணுகி இருக்கவேண்டும்.
"அதை விடுத்துத் தடுப் பாட்டம் ஆடுகிறேன் என்ற பெயரில் பெரும் தவறு செய்து விட்டனர்.
"பெரிய, பெரிய வெற்றிகளைப் பெறும் இங்கிலாந்து அணி, நெருக்கடி ஏற்படும்போது பின் வாங்கி சொதப்பி விடுகின்றனர்," என்றனர்.
இங்கிலாந்து அணி அடுத்தப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 25ஆம் தேதி எதிர்கொள்கிறது.

