கருணரத்னே: கூட்டு முயற்சியால் வீழ்த்தினோம்

கருணரத்னே: கூட்டு முயற்சியால் வீழ்த்தினோம்

2 mins read

லீட்ஸ்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பேரதிர்ச்சி கொடுத்த இலங்கையிடம் 20 ஓட்டங்களில் தோற்றது இலங்கை. இங்கிலாந்தை வீழ்த்தியது குறித்து பேசிய அதன் அணித் தலைவர் கருணரத்னே, "வீரர் களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்தது. "பந்தடிப்பாளர்களும் பந்து வீச்சாளர்களும் சிறப்பாகச் செயல் பட்டனர். இது மாதிரியான ஆடுக ளத்தில் 300 ஓட்டங்களை குவிக்க முடியாது. இதனால் 250 முதல் 275 ஓட்டங்கள் வரை விரும்பி னோம். மேத்யூசின் பந்தடிப்பு அபாரமாக இருந்தது. "232 ஓட்டங்கள் எடுத்தாலும் பந்துவீச்சாளர்கள் நேர்த்தியாகச் செயல்பட்டு இங்கிலாந்தைக் கட்டுப்படுத்தினார்கள்.

"குறிப்பாக மலிங்காவின் பந்து வீச்சுப் பிரமாதமாக இருந்தது. அவர் ஒரு சகாப்தம். இதேபோல தனஞ்செயா டிசில்வாவும் அபார மாக வீசினார்," என்றார். இலங்கை அணி பெற்ற 2வது வெற்றியாகும். ஏற்கெனவே ஆப் கானிஸ்தானை அதை 34 ஓட்டங்­களில் தோற்கடித்து இருந்தது. இங்கிலாந்துக்கு எதிராக முத லில் விளையாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 232 ஓட்டங்கள் எடுத்தது.

மேத்யூஸ் 85 ஓட்டங்களும் ஃபெர்னாண்டோ 49 ஓட்டங்களும் மெண்டிஸ் 46 ஓட்டங்களும் எடுத்தனர். ஆர்ச்சர், மார்க்வுட் தலா 3 விக்கெட்டும் ர‌ஷீத் 2 விக்கெட்டும் கிறிஸ் வோக்ஸ் 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 233 ஓட்டங்கள் என்ற இலக்கை இங்கிலாந்து எளிதில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலங்கை வீரர்களின் அபாரமான பந்துவீச்சால் அந்த அணி திணறியது.

47 ஓவர்களில் 212 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 20 ஓட்டங்களில் இங் கிலாந்து இலங்கையிடம் அதிர்ச்சி கரமான தோல்வியைத் தழுவியது.

பென் ஸ்டோக்ஸ் கடைசிவரை போராடியும் பலன் இல்லாமல் போனது. 5வது வீரராகக் களம் இறங்கிய அவர் 89 பந்தில் 82 ஓட்டங்கள் (7 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்துக் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார். ஜோரூட் 57 ஓட்டங்கள் எடுத்தார். மலிங்கா 43 ஓட்டங்கள் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தி னார். தனஞ்செய டிசில்வா 3 விக்கெட்டும் உதனா 2 விக்கெட் டும் பிரதீப் 1 விக்கெட்டும் எடுத் தனர்.

ஏற்கெனவே பாகிஸ்தானிடம் 14 ஓட்டங்களில் தோற்ற இங் கிலாந்துக்கு இது 2வது தோல்வி.