சௌத்ஹேம்டன்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை இந்தியா எளிதாக வென்றுவிடலாம் என்று எதிர்பார்ப்பு நிலவியது.
ஆனால் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியை ஓட்டங்கள் குவிக்கவிடாமல் கட்டுப்படுத்தி யது ஆப்கானிஸ்தான்.
இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி பூவா தலையா வென்று பந்தடிப்பைத் தேர்வு செய் தார்.
பயிற்சியின் போது பும்ரா வீசிய யார்கரில் காயமடைந்த விஜய் சங்கர் நேற்றைய போட்டியில் களமிறங்கினார்.
காயமடைந்த புவனேஷ்வர் குமாருக்குப் பதிலாக, முகமது ஷமி விளையாடினார். இது மட் டுமே இந்திய அணியின் மாற்றம்.
தொடக்க வீரர்கள் வரிசையை பதம் பார்த்தது ஆப்கானிஸ்தான் பந்துவீச்சு.
கடந்த போட்டியில் பாகிஸ் தானுக்கு எதிராக உலகக் கிண் ணத்தில் அதிக ஓட்டங்கள் எடுத்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்திய ரோகித் சர்மா, நேற்று 10 பந்துகளைச் சந்தித்து ஒரேயொரு ஓட்டம் மட்டும் எடுத்து முதல் விக்கெட்டாக வெளியேறினார்.
ராகுல் 53 பந்துகள் ஆடி 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில், கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந் தார்.
மறுமுனையில் நிதானமாக ஆடி அரைசதம் இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி 67 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார்.
டோனி, கேதார் ஜாதவையும் ஆப்கான் பந்துவீச்சாளர்கள் முடக்கிவிட்டனர். சுமார் 64 பந்துகளுக்குப் பவுண்டரி வர வில்லை.
கோஹ்லியை அடுத்து கேதார் ஜாதவும் நிதான ஆட்டத்தால் அரைசதம் கடந்து கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார்.
டோனி 28 ஓட்டங்களுக்கும் விஜய் சங்கர் 29 ஓட்டங்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ஓட்டத்தில் ஆட் டம் இழந்தனர்.
குல்தீப் யாதவ், பும்ரா ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.
ஆப்கானிஸ்தான் தரப்பில் முகமது நபியும் குல்பதின் நயிபும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில், எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந் தது.
2010க்குப் பிறகு இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் முத லில் பந்தடித்தும் 50 ஓவர்களையும் முழுவதும் ஆடி எடுத்த குறைவான ஓட்டங்கள் இதுவே என்பது குறிப் பிடத்தக்கது.
சிங்கப்பூர் நேரப்படி நேற்று இரவு 9 மணி நிலவரப்படி ஆப்கானிஸ்தானுக்கு 225 ஓட்டங் கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.
இது பந்தடிப்பு பிட்ச் என்று கோஹ்லி கூறி தான் முதலில் பந்தடிப்பைத் தேர்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

