காமன்வெல்த் போட்டிகள்: இந்தியா விலகக்கூடும்

புதுடெல்லி: காமன்வெல்த் போட்டி யில் இருந்து, துப்பாக்கிச் சுடுதல் போட்டி நீக்கப்பட்டதாகக் அறிவிக் கப்பட்ட நிலையில், இந்தியா 2022ஆம் காமன்வெல்த் போட்டி யில் இருந்து விலகக்கூடும் என்று கூறப்படுகிறது.

22வது காமன்வெல்த் விளை யாட்டுப் போட்டி 2022ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹாம் நகரில் நடக்கிறது.

இந்தக் காமன்வெல்த் விளை யாட்டில் துப்பாக்கி சுடுதல் போட்டி நீக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சுடுதல் போட்டி இடம்பெறாது என்று காமன்வெல்த் விளை யாட்டுக் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.

இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கெனவே வில்வித்தை போட்டி இடம் பெறாது என்று தெரிவிக்கப் பட்டு இருந்தது.

துப்பாக்கி சுடுதல், வில் வித்தை போட்டி இடம் பெறாததால் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இருந்து விலகப் போவதாக இந்தியா மிரட்டல் விடுத்துள்ளது.

இதை இந்திய ஒலிம்பிக் சங்கப் பொதுச்செயலாளர் ராஜீவ் மேத்தா தெரிவித்தார். இந்திய ஒலிம்பிக் சங்க செயற்குழு கூட்டம் டெல்லி யில் நடைபெறும்போது இது குறித்து முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

2018ஆம் ஆண்டு துப்பாக்கிச் சுடுதலில் இந்தியா 16 பதக்கங்கள் வென்றது குறிப்பிடத்தக்கது.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!