நடத்தை விதிகளை மீறியதால் கோஹ்லிக்கு அபராதம்

நடத்தை விதிகளை மீறியதால் கோஹ்லிக்கு அபராதம்

1 mins read

ஆப்கானிஸ்தான், இந்திய அணி களுக்கு இடையே நடைபெற்ற உலகக் கிண்ண கிரிக்கெட் ஆட்டத்தில் வீரர்களுக்கான நடத்தை விதிகளை மீறியதாக விராத் கோஹ்லிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டத்தின் 29வது ஓவரில் 'எல்பிடபுள்யூ' வழங்குவது தொடர் பாக நடுவரை ஆக்ரோஷமாக அணுகிய தவற்றுக்காக கோஹ்லிக்கு இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆட்டத்தில் கோஹ்லிக்கு கிடைக்கும் தொகையில் 25 விழுக்காடு அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தவற்றை அவர் ஒப்புக்கொண்டதால் மேற் கொண்டு எந்தவித அதிகாரபூர்வ விசாரணையும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீரர்களுக்கான நான்கு நிலை தவறுகளில் முதல்நிலை தவற்றை கோஹ்லி புரிந்தார். நிலை ஒன்றில் உள்ள விதிகளை மீறினால் ஆட்டத்திற்காக வழங்கப்படும் தொகையில் 50 விழுக்காடு வரை அபராதம் விதிக்கப்படும்.

இதன்மூலம் கிரிக்கெட் வீரர் களுக்கான நடத்தை விதிமுறை களை மீறுவதால் வழங்கப்படும் தண்டப் புள்ளி ஒன்றையும் கோஹ்லி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடியபோது அவ ருக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டு இருந்தது.

ஒரு வீரர் 24 மாத காலத் திற்குள்ளாக நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளைப் பெற்றால் அவருக்கு ஆட்டங்களில் விளையாடுவதற்கான தடை விதிக்கப்படும்.