விராத் கோஹ்லி: போராடி வென்றது முக்கியம்

சவுத்ஹேம்டன்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் ஆப்கானிஸ் தானுக்கு எதிராக நேற்று முன் தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அந்த அணியைப் போராடி வென்றது முக்கியமானது என இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

வலுவான அணிகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை எளிதாக வெற்றி கொள்ளும் என்று எதிர்பார்க்கப் பட்டிருந்த நிலையில் கடும் போராட்டத்துக்குப் பிறகே இந்தியா அதன் நான்காவது வெற்றியைப் பெற்றது. கடைசி ஒவரில்தான் இந்தியா வெற்றி பெற்றது. வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா மற்றும் முகம்மது ஷமியின் கடைசிக் கட்ட ஓவர்கள் சிறப்பாக அமைந்ததால் வெற்றி கிட்டியது.

இந்த வெற்றி குறித்து இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி கூறுகையில், “அதிக ஓட்டங் களைக் குவிக்க வேண்டும் என்பதற்காக பூவா தலையாவில் வென்றதும் பந்தடிப்பைத் தேர்வு செய்தேன். ஆனால் ஆடுகளம் மெதுவாக இருந்தது அதன் பிறகு தான் தெரியவந்தது. இதனால் 260 அல்லது 270 ஓட்டங்களை எடுத்தால் நல்ல ஓட்ட எண்ணிக்கை என்று அப்போது கருதினேன்.

“ஒரு கட்டத்தில் என்ன நடக் குமோ என்ற சந்தேகம் எனது மனதில் வந்துவிட்டது. ஆடு களத்தின் தன்மையைக் கருத்தில் கொண்டு ஓரிரு ஓட்டங்களாக சேர்க்க வேண்டும் என்பதை உணர்ந்தேன். ஆப்கானிஸ்தான் அணியில் மூன்று சிறந்த சுழற் பந்து வீரர்கள் இருந்தனர். எங்களது திட்டத்தை செயல்படுத்த முடியாத அளவிற்கு அவர்கள் மிகச்சிறப்பாகப் பந்து வீசினார்கள். அவர்களில் ஒருவரான முகம்மது நபி மிகவும் அபாரமாக வீசினார்,” என்று கூறினார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 11 ஓட்ட வித்தியா சத்தில் இந்தியா வெற்றி பெற்ற தற்கு பந்துவீச்சாளர்கள் பும்ராவும் ஷமியும் முக்கிய காரணம்.

கோஹ்லி 67 ஓட்டங்களும் கேதார் ஜாதவ் 52 ஓட்டங்களும் எடுத்து அணியின் ஓட்ட எண் ணிக்கையை உயர்த்தினர்.

இந்திய அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட்டுகள் இழப்பிற்கு 224 ஓட்டங்களைச் சேர்த்தது.

“எங்களது பந்துவீச்சாளர்கள் அபாரமாக பந்து வீசி இந்த வெற்றியைப் பெற்றுத் தந்தனர். பும்ரா எந்த நேரத்திலும் விக்கெட்டு களை வீழ்த்தக்கூடியவர். இந்த ஆட்டத்தில் அவர் சிறப்பாக பந்து வீசினார். ஷமி கடைசி ஓவரை அபாரமாக வீசினார்,” என்ற கோஹ்லி, விஜய் சங்கரும் களக் காப்பில் சிறப்பாகச் செயல்பட்டதைச் சுட்டினார்.

ஷமியின் ‘ஹாட்ரிக்’ விக்கெட்

காயமடைந்த புவனேஸ்வர் குமாருக்கு பதிலாக இந்த ஆட்டத்தில் களமிறங்கிய ஷமி, கடைசி ஓவரில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் எடுத்து சாதனை படைத்தார். உலகக் கிண்ணப் போட்டியில் ‘ஹாட்ரிக்’ விக்கெட் பதிவு செய்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். கடைசியாக 1987ஆம் ஆண்டில் சேத்தன் சர்மா எனும் வீரர் இந்தச் சாத னையைப் படைத்திருந்தார்.

ஷமியின் இந்த சாதனை குறித்து கருத்துரைத்த கோஹ்லி, “ஒவ்வொரு வீரரும் சாதனை நிகழ்த்தும் வாய்ப்புக்காக காத்து இருக்கிறார். உலகக் கிண்ணப் போட்டியில் ஆடுவது ஒவ்வொரு வீரருக்கும் பெருமையானதாகும்,” என்றார்.

இந்திய அணி தனது ஆறாவது ஆட்டத்தில் வரும் வியாழக்கிழமை வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சந்திக்கிறது. ஆப்கானிஸ்தான் அணி தொடர்ந்து ஆறாவது தோல்வியைத் தழுவியது. இந்த ஆட்டத்தில் அந்த அணி கடுமை யாகப் போராடித்தான் வெற்றியைப் பறிகொடுத்தது.

ஆட்டத்தில் தோற்றாலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் அனை வரது மனதிலும் இடம்பெற்று விட்டனர்.

அந்த அணி தனது ஏழாவது ஆட்டத்தில் பங்ளாதேஷ் அணியை இன்று எதிர்கொள்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!