கத்தாரைச் சாய்த்த அர்ஜெண்டினா

போர்ட்டோ அலேகிரே:  கோபா அமெரிக்கா காற்பந்துப் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு அர்ஜெண்டினா தகுதி பெற்று உள்ளது.

  ‘பி’ பிரிவில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜெண் டினாவும் கத்தாரும் மோதின. இதில் அர்ஜெண்டினா 2=0 எனும் கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

ஆட்டத்தின் நான்காவது நிமிடத்தில் கத்தார் தற்காப்பு ஆட்டக்காரர் செய்த பிழையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி மார்டினஸ் முதல் கோலைப் போட்டார். 

அதனைத் தொடர்ந்து, தாக்குதல் மேல் தாக்குதல்களை நடத்தியது அர்ஜெண்டினா.

கத்தாரின் கோல்காப்பாளர் மட்டும் விழிப்புடன் இருந்த பல கோல் முயற்சிகளை தடுக்காமல் இருந்திருந்தால் கத்தாரின் நிலைமை மிகவும் மோசமாகி இருக்கும்.

ஆனால் ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் செர்ஜியோ அகுவேரோவின் கோல் முயற்சியை அவரால் தடுக்க முடியாமல்  போனது.

கத்தாரின் தற்காப்பு ஆட்டக் காரர்களைக் கடந்து சென்ற  அகுவேரோ தமது குழுவின் இரண்டாவது கோலைப் போட்டு வெற்றியை உறுதி செய்தார்.

மேலும் பல கோல்களைப் போட அர்ஜெண்டினா கடுமையாக முயன்றது.

மெஸ்ஸி தலைமையில் நடத்தப் பட்ட தாக்குதல்கள் கத்தார் வீரர்களைத் திணறடித்தபோதிலும்  அவை கோல் களாக மாறவில்லை.

இதற்கு கத்தார் தற்காப்பு ஆட்டக்காரர்களின் விட்டுக் கொடுக்காத மனப்பான்மையும் கடுமையான உழைப்பும்தான் காரணம்.

இந்த வெற்றி மூலம் அர்ஜெண்டினா அந்தப் பிரிவில் இரண்டாவது இடத்தைப் பிடித்துக் காலிறுதிக்கு முன்னேறியது. 

அந்த அணி ஒரு வெற்றி, ஒரு சமநிலை, ஒரு தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்றது.

இதே பிரிவில் நடைபெற்ற மற்றோர் ஆட்டத்தில் கொலம்பியா 1=0 என்ற கோல் கணக்கில் பராகுவேயைத் தோற்கடித்தது. 

அந்த அணி ‘பி’ பிரிவில் முதல் இடத்தைப் பிடித்துக் காலிறுதிக்குத் தகுதி பெற்றது.

பிரேசில், வெனிசுவேலா அணிகள் ஏற்கெனவே காலிறுதிக்கு முன்னேறி விட்டன.  

காலிறுதி சுற்றில் அர்ஜென்டினா அணி வெனிசுவேலாவுடன் மோது கிறது.

இம்முறை எந்தக் குழு கோப்பா அமெரிக்கா காற்பந்துக் கிண்ணப் போட்டியில் வாகை சூடி கிண்ணம் வெல்லும் என்று அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

 

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஆண்கள், பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டங்களில் சிங்கப்பூரர்களே மோதியதால் தங்கமும் வெள்ளியும் சிங்கப்பூருக்கே வந்து சேர்ந்தது. படம்: ஃபேஸ்புக்/சிங்கப்பூர் மேசைப் பந்துச் சங்கம்

11 Dec 2019

மேசைப் பந்தில் சிங்கப்பூர் இரண்டு தங்கம்

ஆர்சனலின் மூன்றாவது கோலை அடிக்கும் பியர் எமெரிக் ஒபமெயாங். படம்: ராய்ட்டர்ஸ்

11 Dec 2019

இபிஎல் காற்பந்து: தொடர் தோல்விக்கு ஆர்சனல் முற்றுப்புள்ளி