தென்னாப்பிரிக்க அணியின் பயணம் முடிந்தது

லண்டன்: உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து தென்னாப்பிரிக்க அணி தோல்வி அடைந்து வெளியேறியுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் தென்னாப்பிரிக் காவைப் பாகிஸ்தான் 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 

பாகிஸ்தான் அணியில் சோயப் மாலிக், ஹசன் அலி ஆகியோ ருக்குப் பதிலாக ஹரிஸ் சோகைல், ஷகீன் அஃப்ரிடி சேர்க்கப்பட்டனர்.

பூவா தலையாவில் வென்று முதலில் பந்தடித்த பாகிஸ்தான் அணிக்குப் ஃபகர் ஸமானும் இமாம் உல்=ஹக்கும் அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தனர். 

தென்னாப்பிரிக்காவின் பந்து வீச்சை திறம்பட எதிர்கொண்ட இமாம் உல்=ஹக், இங்கிடியின் ஒரே ஓவரில் மூன்று பவுண்டரிகளை அடித்தார். 

அணியின் ஓட்ட எண்ணிக்கை 81ஆக உயர்ந்த போது இம்ரான் தாகிரின் சுழற்பந்து வீச்சில் ஃபகார் ஸமான் பந்தைத் தலைக்கு மேல்வாக்கில் தூக்கிவிட முயன்றபோது ‘கேட்ச்’ ஆனார். இமாம் உல்=ஹக் 44 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து வந்த வீரர்களில் பாபர் அசாமும் (69 ஓட்டங்கள், 7 பவுண்டரிகள்), ஹரிஸ் சோகை லும் (89 ஓட்டங்கள், 59 பந்துகள், 9 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்) சிறப்பாகப் பந்தடித்து ஓட்டங் களைக் குவித்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் களில் பாகிஸ்தான் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 308 ஓட்டங்கள் குவித்தது. 

உலகக் கிண்ண கிரிக்கெட்டில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராகப் பாகிஸ்தான் அணி 300 ஓட்டங்களுக்கு மேல் எடுத் திருப்பது இதுவே முதல்முறை.

சவால்மிக்க இலக்கை நோக்கிப் பந்தடித்த தென்னாப்பிரிக்கா வுக்குத் தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. 

ஹசிம் ஆம்லா 2 ஓட்டங்கள் மட்டுமே எடுத்திருந்தபோது, முகம்மது அமீரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

முதலில் நடுவர் விரலை உயர்த்தவில்லை. பிறகு பாகிஸ் தான் டி.ஆர்.எஸ். முறைப்படி மேல்முறையீடு செய்து தனக்குச் சாதகமான தீர்ப்பைப் பெற்றுக் கொண்டது.

இதன் பின்னர் தென்னாப் பிரிக்க விக்கெட்காப்பாளர் குவின்டான் டி காக்கும் அணித் தலைவர் டு பிளஸ்ஸியும் ஓரளவு நிலைத்து நின்று ஆடியபோதிலும் பந்தடிப்பில் தேவையான வேகம் இல்லை. அவர்கள் பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார்கள். 

டி காக் 47 ஓட்டங்களிலும் டு பிளஸ்ஸி 63 ஓட்டங்களிலும் அடுத்து வந்த மார்க்ரம் 7 ஓட்டங்களிலும் வான்டெர் துஸ்சென் 36 ஓட்டங்களிலும் டேவிட் மில்லர் 31 ஓட்டங்களிலும் நடையைக் கட்டினர். 

இதனால் நெருக்கடிக்குள்ளான தென்னாப்பிரிக்க அணியால் அதன் பிறகு மீளமுடியாமல் போனது. 50 ஓவர்கள் முழுமையாக ஆடிய தென்னாப்பிரிக்க அணி யால் 9 விக்கெட்டுகளுக்கு 259 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. 

இதனால் பாகிஸ்தான் 49 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஆறாவது ஆட்டத்தில் ஆடிய பாகிஸ்தானுக்கு இது இரண்டாவது வெற்றியாகும். இதன் மூலம் அந்த அணி அரையிறுதி வாய்ப்பைத் தக்க வைத்துக் கொண்டது. 

ஆனால் தென்னாப்பிரிக்கா வின் அரையிறுதி வாய்ப்பு இந்தத் தோல்வியின் மூலம் தவிடு பொடியானது. இப்போட்டியில் தென்னாப்பிரிக்காவுக்கு இது ஐந்தாவது தோல்வியாகும். 

“நாங்கள் சரியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. பாகிஸ் தான் அணியின் சிறப்பான தொடக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. 

“தொடக்கத்திலேயே நாங்கள் விக்கெட்டுகளை இழந்து விட்டோம்.

“உலகக் கிண்ணப் போட்டியில் நாங்கள் சரியாக ஆடவில்லை. எங்கள் தோல்வியை நியாயப்படுத்த முடியாது. 

“இம்ரான் தாகிர் சிறப்பாகப் பந்துவீசினார். அவர் விதிவிலக் கானவர். மற்ற பந்துவீச்சாளர்கள் அவருக்குத் துணை நிற்கவில்லை.

“எங்கள் அணியின் வேகப்பந்து வீரர் ரபாடாவை ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் இருக்க முயற்சி செய்தோம். அவர் ஐபிஎல் போட்டியில் ஆடாமல் இருந்தால் புத்துணர்வுடன் இருந்து இருப்பார். ஓய்வு இல்லாமல் இருந்தது பாதிப்பை ஏற்படுத்தியது. ஐபிஎல் போட்டியைவிட உலகக் கிண்ணம் முக்கியமானது.

“தென்னாப்பிரிக்காவின்  வெளியேற்றத்துக்கு ஐபிஎல் போட்டி காரணமாக அமைந்து விட்டது,” என்று தென்னாப்பிரிக்க அணித் தலைவர் டு பிளஸ்ஸி தெரிவித்தார்.

 

Read more from this section

போர்ச்சுகல் காற்பந்துக்குழுவின் நட்சத்திர ஆட்டக்காரர் நட்சத்திர ஆட்டக்காரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. படம்: ஏஎப்பி

13 Oct 2019

போர்ச்சுகலுக்காக நூறு கோல் இலக்கை நெருங்கும் ரொனால்டோ

செக் குடியரசு கோல்காப்பாளர் எதிரே இங்கிலாந்து வீரர் மேசன் மவுண்ட்டின் (இடது) கோல் போடும் முயற்சியை முறியடிக்கும் செக் குடியரசின் ஓன்ட்ரேச் செலுட்ஸ்கா (வலது). படம்: ஏஎஃப்பி

13 Oct 2019

இங்கிலாந்துக்கு பத்து ஆண்டுகளில் முதல் தோல்வி

ஓட்டத்தை முடித்தபோது வெற்றிக் களிப்பில் காணப்படும் எலியுட் கிப்சோஞ்ச். படம்: இபிஏ

13 Oct 2019

நெடுந்தொலைவு ஓட்டம்: வரலாற்று சாதனை படைத்த கென்ய நாட்டவர்