பங்ளாதேஷ் அசத்தல் வெற்றி

சௌத்ஹேம்டன்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியை வீழ்த்தியதன் மூலம் தனது உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை பங்ளாதேஷ் அணி நீடித்திருக்கச் செய்துள்ளது.

ஷாகிப் அல் ஹசனின் அரை சதமும், ஐந்து விக்கெட்டுகளும் பங்ளாதேஷ் அணியை 62 ஓட்டங் கள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தது.

பூவா, தலையா வென்ற ஆப்கா னிஸ்தான் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதைத் தொடர்ந்து முதலில் பந்தடித்த பங்ளாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 262 ஓட்டங்கள் எடுத்தது.

முஸ்பிகுர் ரஹீம் அதிகபட்ச மாக 83 ஓட்டங்கள் சேர்த்தார்.

நிதானமாக விளையாடிய ஷாகிப் அல் ஹசன் 51 ஓட்டங்கள் எடுத்த நிலையில் முஜிப் உர் ரஹ்மான் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

தொடக்க வீரர்களான லிட்டன் தாஸ் 16, தமிம் இக்பால் 36 ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.

சௌமியா சர்க்கார் 3 ஓட்டங் களில் முஜிப் உர் ரஹ்மான் பந்தில் விக்கெட்டைப் பறிகொடுத்தார்.

மஹ்மதுல்லா 27, மோசடக் ஹோசைன் 35 ஓட்டங்கள் சேர்த்ததால் பங்ளாதேஷ் அணி யால் சற்றுக் கௌரவமான இலக்கை எட்ட முடிந்தது.

ஆப்கானிஸ்தானின் முஜிப் உர் ரஹ்மான் 3, குல்பதீன் நயிப் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

263 ஓட்டங்கள் இலக்குடன் பந்தடித்த ஆப்கானிஸ்தான் அணி யானது ஷாகிப் அல் ஹசனின் சுழலில் ஆட்டம் கண்டது.

47 ஓவர்களில் 200 ஓட்டங் களுக்கு அனைத்து விக்கெட்டு­களையும் இழந்தது.

அதிகபட்சமாக சமியூல்லா ‌ஷின் வாரி 49 ஓட்டங்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

பங்ளாதேஷ் சார்பில் ஷாகிப் அல் ஹசன் 5, முஸ்தாபிசுர் ரஹ் மான் 2 விக்கெட்டுகளைக் கைப் பற்றினர்.

இதன் மூலம் 3வது வெற்றியைப் பதிவு செய்த பங்ளாதேஷ் அணி, 7 புள்ளிகள் பெற்றுள்ளது.

ஷாகிப் அல் ஹசனின் சாதனை

ஆட்ட நாயகனாகத் தேர்வான ஆல்--ரவுண்டர் ஷாகிப் அல் ஹசன், இப்போட்டியில் பல சாதனைகளை யும் படைத்தார்.

இப்போட்டியில் 10 ஓவரில் 29 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஷாகிப்பின் தனிப்பட்ட ஆகச்சிறந்த பந்துவீச்சாகும்.

இதன் மூலம் உலகக் கிண்ணத் தில் ஒரே ஆட்டத்தில் 5 விக்கெட் டுகள் வீழ்த்திய முதல் பங்ளாதேஷ் வீரர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரரானார்.

ஒரே உலகக் கிண்ணப் போட்டியில் ஷாகிப் அல் ஹசனும் 51 ஓட்டங்கள், 5 விக்கெட்டு களைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.

இதற்கு முன்பு, இந்திய வீரர் யுவராஜ் சிங் 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தில் அயர்லாந் துக்கு எதிராக 50 ஓட்டங்கள், 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்திருந்தார் என் பது குறிப்பிடத்தக்கது.

2007ஆம் ஆண்டிலிருந்து உலகக் கிண்ணப் போட்டியில் பங்கேற்று வரும் இவர் உலகக் கிண்ணத்தில் 1,000 ஓட்டங்கள் மற்றும் 30 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய முதல் பங்ளாதேஷ் வீரர் ஆனார்.

ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபியின் விக்கெட்டைக் கைப்­பற்றிய

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!