வெஸ்ட் இண்டீசுடன் இந்தியா இன்று மோதல்

வெஸ்ட் இண்டீசுடன் இந்தியா இன்று மோதல்

1 mins read

லண்டன்: இந்திய அணி 6வது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசை இன்று எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் மான்செஸ்டரில் உள்ள ஓல்டுடிரா போர்ட் மைதானத்தில் சிங்கப்பூர் நேரடிப்படி மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியின் அதிரடி தொடருமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். இந்திய அணி 4 ஆட்டங்களில் விளையாட வேண்டி உள்ளது.

இதில் இரண்டில் வென்றால் தான் அரை இறுதிப் போட்டிக்குள் நுழைய முடியும். இதனால் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி 5வது வெற்றியைப் பெறும் ஆர்வத்தில் உள்ளனர் இந்திய வீரர்கள்.