ஆப்பிரிக்கக் கிண்ண காற்பந்தில் சாலா போட்ட கோல்

ஆப்பிரிக்கக் கிண்ண காற்பந்தில் சாலா போட்ட கோல்

1 mins read

கெய்ரோ: ஆப்ரிபிக்கக் கிண்ணக் காற்பந்துப் போட்டியில் இதுவரை நடைபெற்ற இரண்டு ஆட்டங்களிலும் எகிப்து வெற்றி வாகை சூடியுள்ளது.

இதில் நேற்று அதிகாலை எகிப்திய தலைநகர் கெய்ரோவில் நடைபெற்ற ஆட்டத்தில் காங்கோ ஜனநாயகக் குடியரசுடனான மோதலில் அது 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்றது.

இதில் இங்கிலிஷ் பிரிமியர் லீக் குழுவான லிவர்பூல் அணியின் தாக்குதல் ஆட்டக்காரராகச் சிறப்பாக விளையாடிவரும் முகம்மது சாலா சக வீரரான அகமது எல்மோகாதி முதல் கோல் போட உதவியதுடன் ஆட்டத்தின் 43ஆம் நிமிடத்தில் இரண்டு எதிரணி வீரர்களைத் தாண்டி சக வீரரான டிரெசகே தந்த பந்தை பலம் கொண்ட மட்டும் உதைத்து தாமும் ஒரு கோல் போட்டு ஆட்டநாயகனாக விளங்கினார்.

இந்த வெற்றியைத் தொ டர்ந்து நைஜீரியா நாட்டுடன் ஆப்பிரிக்கக் கிண்ணக் காற்பந்துப் போட்டியின் காலிறுதிக்கு எகிப்து தகுதி பெற்றுள்ளது.

எகிப்து கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஆப்பிரிக்கக் கிண்ண ப் போட்டியில் வெற்றியாளராகவும் 2017ஆம் ஆண்டின் இறுதிப் போட்டியில் தோற்று இரண்டாம் இடத்தைப் பிடித்ததும் நினைவுகூரத்தக்கது.