நியூசிலாந்தை கூட்டு முயற்சியால் தோற்கடித்தது பாகிஸ்தான்

பர்மிங்ஹம்: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானிடம் வீழ்ந்து நியூசிலாந்து முதல் தோல்வியைத் தழுவியது.

பர்மிங்ஹமில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 237 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. ஜேம்ஸ் நீஷம் 97 ஓட்டங்களும் (5 பவுண்டரிகள், 3 சிக்சர்கள்), கிராண்ட்ஹோம் 64 ஓட்டங்களும், அணித் தலைவர் வில்லியம்சன் 41 ஓட்டங்களும் எடுத்தனர். ஷகீன் ஷா அப்ரிடி 3 விக்கெட்டுகளும், முகமதுஅமீர், சதாப் கான் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் விளையாடிய பாகிஸ்தான் அணி பாபர் ஆசமின் சதத்தால் வெற்றி பெற்றது. அந்த அணி 49.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 241 ஓட்டங்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

பாபர் ஆசம் 127 பந்துகளில் 101 ஓட்டங்களும் (11 பவுண்டரி), ஹாரிஸ் சோகைல் 68 ஓட்டங்களும் (5 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். போல்ட், பெர்குசன், கொலின் மன்ரோ தலா 1 விக்கெட் எடுத்தனர். பாகிஸ்தான் அணி பெற்ற 3வது வெற்றியாகும். இதன்மூலம் அந்த அணி அரை இறுதிக்கான வாய்ப்பில் தொடர்ந்து நீடித்து வருகிறது. 7 புள்ளியுடன் அந்த அணி 6வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. வீரர்களின் கூட்டு முயற்சியால் இந்த வெற்றி கிடைத்ததாகப் பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ஃபிராஸ் அகமது கூறியுள்ளார்.

"மிகவும் கடுமையாகப் போராடி இந்த வெற்றியைப் பெற்றோம். வீரர்களின் கூட்டு முயற்சி வெற்றிக்குக் காரணமாக இருந்தது. அனைத்துப் பந்துவீச்சாளர்களும் மிகவும் சிறப்பாகச் செயல்பட்டனர்.

"பாபர் ஆசம், சோகைல் பந்தடிப்புப் பிரமாதமாக இருந்தது. நான் பார்த்த சிறந்த பந்தடிப்பு இதுவாகும். 238 ஓட்டங்கள் கடினமான இலக்கு என்பது தெரியும். இதனால் 50 ஓவர் வரை ஆடுவது என்று விரும்பினேன். ஆடுகள தன்மைக்கேற்ப பாபரும், ஹாரிசும் பொறுப்புடன் ஆடினர். அடுத்த போட்டியிலும் நாங்கள் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு எப்போதுமே இருக்கிறது," என்று அவர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

நியூசிலாந்து அணி முதல் தோல்வியைத் தழுவியது. இந்தத் தோல்வி குறித்து அந்த அணித் தலைவர் வில்லியம்சன் கூறும்போது, “பாகிஸ்தான் எல்லா வகையிலும் எங்களைவிடச் சிறப்பாகச் செயல்பட்டது. பாபர் ஆசரும் சோகைலும் 'பிட்ச்' தன்மைக்கு ஏற்றுவாறு ஆடினார்கள்” என்றார்.

பாகிஸ்தான் அணி அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை 29 ஆம் தேதியும், நியூசிலாந்து அணி அதே தினத்தில் ஆஸ்திரேலியாவையும் சந்திக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!